கருங்கல்: இசை கலைஞருடன் மாயமான மாணவி ; போலீசார் மீட்பு
பாலப்பள்ளம் பகுதி சேர்ந்த 19 வயது பெண் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கல்லூரி சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பெற்றோர் கருங்கல் போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணையில் மேள இசை கலைஞரான வாலிபருடன் மாணவி மாயமானது...
புதுக்கடையில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 பேர் கைது
இனயம் திருப்பு என்ற பகுதியில் புதுக்கடை போலீசார் இன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு நின்ற 2 பேரிடம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 14.5 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் மேக்காமண்டபம் பகுதியைச் சேர்ந்த ஜெரின் ஜேக்கப் (29), தேங்காபட்டணம் பகுதி எட்வர்ட்...
நாகர்கோயில்: வருவாய்த்துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம்
தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நேற்று நடந்தது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களுக்கு உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் உரிய பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்கள் மீது தாக்குதல்...
வில்லுக்குறி: மொட்டு காளான் வளர்ப்பு நிலையம்; கலெக்டர் பார்வை
குளச்சல் தொகுதி, வில்லுக்குறி கிராமத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி (AIF) மற்றும் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மானியம் மூலமாகவும் மொட்டு காளான் வளர்ப்பு அலகு நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த அலகின் மூலம் தினசரி 300 முதல் 500...
தக்கலை: காதல் தோல்வி – ஏசி மெக்கானிக் தற்கொலை
தக்கலை, மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் செல்ல நாடார் மகன் பாலகிருஷ்ணன் (31) ஏசி மெக்கானிக் படித்து வெளிநாட்டில் வேலையில் உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்து புதிதாக வீடு கட்டி, புது மனை புகுவிழா நடத்தியுள்ளார். இந்த நிலையில் அவரை காதலித்த பெண்ணை திருமணம்...
குலசேகரம்: தொழிலாளியை கொல்ல முயற்சி.. 7 ஆண்டு சிறை
குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (64). தையல் தொழிலாளியான இவருக்கும் அக்கத்து வீட்டைச் சேர்ந்த கோபன் என்ற பாபுவுக்கும் சொத்துப் பிரச்சனை இருந்தது. கடந்த 2-1-2013 ஆம் ஆண்டு ஜெயக்குமார் கடையில் வேலை செய்துகொண்டிருந்தபோது கோபன் அரிவாளால் அவரை வெட்டிக் கொலை முயற்சி செய்தார். வழக்கு பத்மநாபபுரம்...
பளுகல்: பைக் விபத்து.. பூசாரி படுகாயம்
அளப்பங்கோடு பகுதியில் உள்ள ஈஸ்வரகால பூதத்தான் கோவிலில் பூசாரியாக பாறசாலை பகுதி சேர்ந்த அசோகன் என்பவர் உள்ளார். நேற்று பைக்கில் கோவிலுக்கு செல்லும் போது எதிரே அடைக்காகுழி பகுதியை சேர்ந்த ஜிதின் (20) என்பவர் ஓட்டிய பைக் திடீரென அசோகன் ஓட்டிய பைக் மீது மோதியது. இதில்...
குமரி: 58700 கால் நடைகளுக்கு தடுப்பூசி – ஆட்சியர் தகவல்
குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை கால்நடைகளுக்கு 6 சுற்று கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி நடந்துள்ளது. எதிர்வரும் 7வது சுற்றில் சுமார் 58,700 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டிட இலக்கு நிர்ணயித்து கால்நடை பராமரிப்புத்துறை செயல் திட்டம் வகுத்துள்ளது....
நாகர்கோவில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சி கூட்டரங்கில் திருநங்கைகள் திருநம்பிகள் மற்றும் இடைபாலினத்தவர்களுக்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கலந்துகொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு முகாம்மினை பார்வையிட்டார். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு...
முட்டம்: கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது
முட்டம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் மற்றும் தக்கலை மது விலக்கு போலீசார் நேற்று முட்டம் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பைக்கில் சென்ற 2 வாலிபர்களிடம் 2 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் அறையில் சாராயம் காய்ச்ச...













