அளப்பங்கோடு பகுதியில் உள்ள ஈஸ்வரகால பூதத்தான் கோவிலில் பூசாரியாக பாறசாலை பகுதி சேர்ந்த அசோகன் என்பவர் உள்ளார். நேற்று பைக்கில் கோவிலுக்கு செல்லும் போது எதிரே அடைக்காகுழி பகுதியை சேர்ந்த ஜிதின் (20) என்பவர் ஓட்டிய பைக் திடீரென அசோகன் ஓட்டிய பைக் மீது மோதியது. இதில் அசோகன் படுகாயம் அடைந்து சுய நினைவு இழந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் காரக்கோணம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக பளுகல் போலீசார் ஜிதின் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.