கடையாலுமூடு: பேரூராட்சி கவுன்சிலர் மீது தாக்குதல் – வழக்கு
கடையாலுமூடு பேரூராட்சியின் 14வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரனுக்கும், தேங்காய் வியாபாரி தேவதாஸுக்கும் இடையே குடிநீர் குழாய் தோண்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த தேவதாஸ், ராஜேந்திரனை தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளார். இது குறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், கடையாலுமூடு போலீசார் தேவதாஸ் மீது வழக்கு பதிவு...
வெள்ளிச்சந்தை: போதை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி
குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா சார்பில் போதை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி வெள்ளிசந்தையில் நேற்று நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார் போட்டியை துவக்கி வைத்தார். 18 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்ற இப்போட்டியில், ஹரிஷி முதல் பரிசையும், அஸ்வின் இரண்டாம் பரிசையும், சச்சின்...
காப்புக்காடு: தொல்காப்பியர் அறக்கட்டளை கூட்டம்
காப்புக்காடு, தொல்காப்பியர் சிலை வளாகத்தில் நேற்று 28-ம் தேதி தொல்காப்பியர் அறக்கட்டளைக் கூட்டம் தலைவர் மு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சஜீவ் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில், தொல்காப்பியர் மற்றும் தொல்காப்பியம் குறித்து மாஸ்தரன் சிங் சிறப்புரை ஆற்றினார். துணைத் தலைவர்கள் சிந்துகுமார், சுரேஷ், குமரி முத்தமிழ்...
நித்திரவிளை: பைக் ஓட்டிய சிறுவன் தாய் மீது வழக்கு
நித்திரவிளை அருகே, 15 வயது சிறுவன் ஓட்டி வந்த பைக் வாகன சோதனையின் போது சப் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பிறகு, பைக் சிறுவனின் தாயாருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து, வள்ளவிளை பகுதியை சேர்ந்த ஷோபா (39) மீது...
இளங்கடையில் ரேஷன் கடையில் கலெக்டர் அழகுமீனா திடீர் ஆய்வு.
நாகர்கோவிலில் உள்ள இளங்கடை ரேஷன் கடையை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேற்று திடீரென ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பாமாயில், சர்க்கரை, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து அவர் கேட்டறிந்தார். ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கை மற்றும் விரல் ரேகை பதிவு...
நாகர்கோவிலில் மருந்து கடையை உடைத்து ரூ. 1 லட்சம் திருட்டு.
நாகர்கோவில் சைமன் நகரைச் சேர்ந்த கலாதாரன் (53) என்பவர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சாலை, தெற்கு தெருவில் 9 வருடங்களாக மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கடையைப் பூட்டிவிட்டுச் சென்றார். மறுநாள் காலை 9 மணிக்குத் திறக்க வந்தபோது, கடையின்...
வெள்ளிச்சந்தை: பைக்கில் மகனுடன் சென்ற மூதாட்டி விழுந்து பலி
வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த காய்கறி கடை உரிமையாளர் பாலமுருகன், தனது தாய் தமிழரசியுடன் பைக்கில் சென்றபோது, அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளிச்சந்தை போலீசார், மகன் பாலமுருகன்...
பேச்சிப்பாறை: அணை கட்டிய மன்னர் 168-வது பிறந்தநாள் விழா
பேச்சிப்பாறை அணை கட்டிய மன்னர் ராமவர்மா ஸ்ரீமூலம் திருநாளின் 168-வது பிறந்தநாள் விழா மற்றும் அணையை அமைத்த பொறியாளர் கம்ப்ரி அலெக்சாண்டர் மிஞ்சின் 112-வது நினைவு நாள் விழா நேற்று (25-ம் தேதி) பேச்சிப்பாறை அணை அருகில் நடைபெற்றது. இதில் குமரி மாவட்ட பாசன சபை தலைவர்...
குழித்துறை: மெகா தூய்மைப்பணி; 400 பேர் பங்கேற்பு
குழித்துறை நகராட்சிக்குட்பட்ட இடவிளாகம் ரயில்வே பாதை அருகே குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நேற்று குழித்துறை நகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மெகா தூய்மைப் பணியை மேற்கொண்டன. நகராட்சி தலைவர் பொன் ஆசை தம்பி துவக்கி வைத்த இந்த...
கடையால்: மின் அலுவலகத்தில் தர்ணா ; போலீஸ் பேச்சு வார்த்தை
கடையால் பேரூராட்சிக்குட்பட்ட போங்காலை பகுதியை சேர்ந்த தொழிலாளி சுந்தர்ராஜ் (59) வீட்டில் மரம் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தபோது, ரூ.94 ஆயிரம் கட்ட வேண்டும் என கூறப்பட்டதாக தெரிகிறது. 24 நாட்கள் மின் இணைப்பு இல்லாத நிலையில், நேற்று சுந்தர்ராஜ் தனது...








