நித்திரவிளை: ஆற்றின் கரையில் தலைமை பொறியாளர் ஆய்வு
கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட வைக்கல்லூர் ஆற்றில் பரக்காணி தடுப்பணையில் 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மண் அரிப்பு ஏற்பட்டது. மண் அரிந்து சென்ற பகுதியை சீரமைக்க தமிழக அரசு 2 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த பணிக்கு அரசாணை மூலம் சிற்றாறு அணை...
தக்கலை: 134 சிசிடிவி கேமராக்கள் தொடங்கி வைத்த எஸ்பி
தக்கலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 134 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாடு மற்றும் கட்டுப்பாட்டு அறையை குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேற்று மாலை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் தக்கலை காவல் ஆய்வாளர் கிறிஸ்டி வரவேற்றார். தக்கலை டிஎஸ்பி பார்த்திபன் முன்னிலை வகித்தார். மேலும்...
குளச்சல்: வீட்டில் கருகிய நிலையில் மூதாட்டி சடலம்
குளச்சல் அருகே பிலாங்கரைகாலனியை சேர்ந்தவர் கமலம் (72). வெள்ளியாகுளம் ஏலா பகுதியில் உள்ள தோப்பில் வேலை செய்து வந்தார். இதற்காக அங்கு தகர கொட்டகை அமைத்து தனியாக தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் கமலம் தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். அங்கு மண்ணெண்ணெய்...
கருங்கல்: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இரங்கல் கூட்டம்
மார்க்சிஸ்ட் கட்சி ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும், கேரள மாநில முன்னாள் முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிள்ளியூர் கிழக்கு வட்டார கமிட்டி சார்பாக கருங்கல் ராஜீவ் ஜங்சனில் அஞ்சலி கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது. கிழக்கு வட்டார செயலாளர் ராஜா தலைமை...
அருமனை: 2 குழந்தையுடன் பெண் மாயம் – வரதட்சணை கொடுமையா?
அருமனை அருகே இரும்புலி பகுதியைச் சேர்ந்தவர் ஞானதாஸ் - விலாசினி தம்பதியின் மகள் பென்ஷா (28). இவர் ராஜ்வினிஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். 7, 5 வயதில் மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் பென்ஷா அவரது 2 குழந்தைகளுடன் திடீரென மாயமாகியுள்ளார். இதையடுத்து தாய் விலாசினி...
நாகர்கோவில்: தொழிலாளியைத் தாக்கிய 2 பேர் கைது
நாகர்கோவில் கோட்டார் பாறைக்காமடத் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி செல்வம் (28), கூலித் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ரெயில்வே ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் அந்தோணி செல்வத்திடம் தகராறு செய்தனர். திடீரென பீர்பாட்டிலால் அந்தோணி செல்வத்தை...
குமரி அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள நீண்ட கரை பகுதியில் தனியார் கல்லூரிக்குச் சொந்தமான இடம் ஒன்று உள்ளது. தற்போது இந்தக் கல்லூரி செயல்பாட்டில் இல்லை. கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் மனித எலும்புக்கூடு ஒன்று கிடப்பதாக ராஜாக்கமங்கலம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில்...
தக்கலை: அரசு பஸ் கதவில் சிக்கி பெண் படுகாயம்
தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் மனைவி ருக்மணி (67) நேற்று இவர் திருவட்டாறு செல்லும் பஸ்ஸில் இரவிபுதூர் கடை பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ்ஸில் ஏறினார். இந்த பஸ் தானியங்கி கதவு பொருத்தப்பட்டது ஆகும்.
ருக்மணி பஸ்ஸில் ஏறி உள்ளே செல்வதற்குள் டிரைவர் தானியங்கி...
குளச்சல்: சிறுவனைத் தாக்கி பைக் உடைப்பு… 3 பேர் மீது வழக்கு
குளச்சல், வாணியகுடியைச் சேர்ந்த ஒருவரின் 17 வயது மகன் நேற்று தனது மாமாவின் பைக்கில் குளச்சல் மீன் பிடித்துறை முகத்திற்குச் சென்றார். அங்கே அவர் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஷெர்லின் (25) மற்றும் 2 வாலிபர்கள் சிறுவனிடம் தகராறு செய்து, ஆயுதங்களால் சிறுவனைத்...
மார்த்தாண்டம்: ஆசிரியர் வீட்டில் பைக், லேப்டாப் திருட்டு
மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் (71). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் திருமணமான தனது மகளுடன் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். இதனால் மருதங்கோட்டில் உள்ள வீடு பூட்டி கிடந்தது. சம்பவ தினம் உறவினர்கள் போன் செய்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கூறினார்....













