குழித்துறையில் காங்கிரஸ் திடீர் மறியல்: 100 பேர் கைது
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, குழித்துறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று மாலை களியக்காவிளை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. களியக்காவிளை போலீசார் மேல்புறம் வட்டாரத் தலைவர் ரவிசங்கர், காங்கிரஸ் தலைவர் திபாகர் உள்ளிட்ட 100 பேரை கைது செய்தனர்....
மார்த்தாண்டம்: காப்பகத்தில் இருந்து மாயமான 2 சிறுமிகள் மீட்பு
மார்த்தாண்டம் பகுதியில் செயல்படும் கிறிஸ்தவ நிறுவனத்தின் ஆதரவற்றோர் காப்பகத்தில் இருந்து 17 மற்றும் 14 வயதுடைய இரு மாணவிகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தக்கலை பகுதியில் பள்ளிக்கு சென்று வந்த இவர்கள், நேற்று முன்தினம் திடீரென காணாமல் போயினர். இது குறித்து காப்பகத் தலைவி மார்த்தாண்டம்...
நாகர்கோவில்: பைக் மீது மோதி கண்டக்டர் காயம்
வெள்ளிச்சந்தை அருகே நாகர்கோவிலில் கண்டக்டராக பணிபுரியும் பிரதீஷ் (33) என்பவர் ஸ்ரீனிவாசன் ஓட்டி வந்த பைக் மீது மோதி காயமடைந்தார். ராஜாக்கமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரதீஷின் விபத்து குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் ஸ்ரீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி...
குமரி மீட்புப் போராட்டம்: தியாகிகளுக்கு நாம் தமிழர் அஞ்சலி
குமரி மாவட்டத்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மலையாள ஆதிக்கத்திலிருந்து மீட்க குமரித்தந்தை மார்சல் நேசமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 1954 ஆகஸ்ட் 11 அன்று மார்த்தாண்டம், புதுக்கடை பகுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 11 தமிழர்கள் வீரமரணமடைந்தனர். இந்த தியாகிகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் புதுக்கடை, மங்காடு தியாகிகள்...
குமரி மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 285 மனுக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர், சாலை வசதி, கலைஞர் மகளிர் தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள்...
குமரி: மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கண்டன பொதுக்கூட்டம்: விஜய் வசந்த் பங்கேற்பு
மத்திய பிஜேபி அரசை கண்டித்து குருந்தன்கோடு கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் குருந்தன்கோடு சந்திப்பில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வட்டாரத் தலைவர் பொன். பால் துரை தலைமை தாங்கினார். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். குளச்சல் சட்டமன்ற உறுப்பினர்...
குமரி: அழகுமுத்துக்கோன் குருபூஜை: மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
நாகர்கோவிலில் தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 268-வது குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில...
மார்த்தாண்டம்: தங்கம் மாற்றித் தருவதாக.. 7 பவுன் நகை பறிப்பு
மார்த்தாண்டத்தில், லிட்டில் மேரி (55) என்பவர் 7 பவுன் தங்க நகைகளை மாற்றி எடுக்கச் சென்றபோது, 60 வயது முதியவர், 45 வயது பெண் மற்றும் 10 வயது குழந்தை ஆகியோர் சேர்ந்து, லாபத்தில் நகைகளை மாற்றித் தருவதாகக் கூறி, அவரிடமிருந்து நகைகளைப் பெற்றுக்கொண்டு போலியான நகைகளைக்...
நித்திரவிளை: திருமணமாகி ஒரேநாளில் புதுப்பெண்ணுக்கு சித்ரவதை
நித்திரவிளை அருகே சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி (25) என்பவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (29) என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான மறுநாளிலிருந்தே கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அஸ்வினியை ஒதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி...
மார்த்தாண்டம்: பயன்பாடற்ற பயோ கழிவறை.. விஜய் வசந்த் எம்பி ஆய்வு
மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட பயோ கழிவறை பயன்பாடின்றி காணப்பட்டது. இது குறித்து ஆய்வு செய்ய விஜய் வசந்த் எம்பி சம்பவ இடத்தை நேற்று பார்வையிட்டார். அவருடன் குழித்துறை நகராட்சி ஆணையாளர், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டு, கழிவறையை பயன்பாட்டிற்கு...












