Google search engine

கிள்ளியூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்; எம்.எல்.ஏ. பங்கேற்பு

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, முள்ளங்கினாவிளை ஊராட்சிக்குட்பட்ட முள்ளங்கினாவிளை புனித அந்தோணியார் கலையரங்கத்தில் நேற்று ”உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. முகாமை தொடங்கி வைத்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அஜிதா தலைமை வகித்த இந்த...

நாகர்கோவிலில் வீடு புகுந்து திருட முயற்சி: சிக்கிய கைரேகை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், பெர்னாண்டஸ் என்பவர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் திருட முயற்சித்துள்ளார். வீட்டில் எதுவும் கிடைக்காததால், அவர் தப்பிச் சென்றுள்ளார். இருப்பினும், வீட்டில் மறைத்து வைத்திருந்த ரூ. 65 ஆயிரம் தப்பியது. நேசமணி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில்,...

காப்புக்காடு கிட்டங்கி சீரமைப்பு: ஆட்சியர் ஆய்வு

காப்புக்காடு பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் பழமையான செயல்முறை கிட்டங்கியை மறுசீரமைப்பு செய்ய தமிழ்நாடு அரசு ரூ. 13 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. தரைதளம் மற்றும் கட்டிட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு...

குமரி: மாநாட்டில் மருத்துவமனை தரம் உயர்வு தீர்மானம்

கொல்லங்கோடு வட்டார டி ஒய் எப் ஐ மாநாடு கண்ணநாகம் இ. எம். எஸ் சென்டரில் நேற்று நடைபெற்றது. வட்டார செயலாளர் ரமேஷ் கொடியேற்ற, துணை தலைவர் ஆனந்த் பாபு தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்ட இணை செயலாளர் ரமேஷ் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட...

குமாரபுரம்: களைக்கொல்லி குடித்த விவசாயி உயிரிழப்பு

குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதான ராஜரத்தின ராமசாமி, நேற்று மதியம் தனது தோட்டத்தில் மதுவுடன் களைக்கொல்லி மருந்தை குடித்து ஆபத்தான நிலையில் கிடந்தார். அப்பகுதி மக்கள் அவரை தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். ராமசாமி ஏற்கனவே...

குமரி: ஆஸ்பத்திரிக்குள் போதையில் ரகளை… லாரி டிரைவர் கைது

குழித்துறை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் போதையில் வந்த நபர், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களைத் தாக்கி ரகளையில் ஈடுபட்டார். இது தொடர்பாக மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கடையல் பிலாந்தோட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் குமார் (35) நேற்று கைது செய்யப்பட்டார்.

குமரி: கண்ணாடி பாலத்தில் 3 நாட்களில் 40 ஆயிரம் பேர் பார்வை

சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் உள்ள கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலம், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை மூன்று நாட்களில் சுமார் 40 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுள்ளனர். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் தகவலின்படி, நாள் ஒன்றுக்கு சராசரியாக 3,500...

குமரியில் ஒருவர் மரணம்: கொலையா தற்கொலையா?

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே வினோத் என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில், ஆறுகாணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வினோத் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இது...

குமரி ராணுவ வீரரின் மனைவி தற்கொலை: திருமண நாளில் சோகம்

பைங்குளம் பகுதியைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் அனீஸ், தனது 2வது திருமண நாளுக்காக விடுமுறையில் காஷ்மீரிலிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இதனிடையே, அவரது மனைவி சிந்து (25) நேற்று முன்தினம் இரவு திடீரென விஷம் குடித்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக புதுக்கடை போலீசார்...

குமரி: அரசு மண்ணெண்ணெய் கடத்தல்… காரில் 1000 லி பறிமுதல்

நித்திரவிளை வழியாக கேரளாவிற்கு அரசு மானிய விலை மண்ணெண்ணெய் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் காரை மடக்கிச் சோதனை செய்தனர். இதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 26 கேன்களில் மொத்தம் 1000 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய் கண்டறியப்பட்டது. மண்ணெண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட டிரைவர்...