Google search engine

குமரி: பஸ் இருக்கையில் இறந்த நிலையில் டிரைவர்

கன்னியாகுமாரி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து ஓட்டுநர் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த தாணு பிள்ளை (62) நேற்று படந்தாலுமூடு பகுதியில் பேருந்து நிறுத்தும் இடத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 108 ஆம்புலன்ஸ் மூலம் பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. களியக்காவிளை போலீசார் இது...

மார்த்தாண்டம்: கேரளாவுக்கு கடத்திய மண்ணெண்ணெய் பறிமுதல்

விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி தலைமையிலான அதிகாரிகள், சென்னித்தோட்டம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அரசு மானிய விலையில் படகுகளுக்கு வழங்குகின்ற சுமார் 500 லிட்டர் மண்ணெண்ணெயை கடத்திச் சென்ற மினி டெம்போவை காப்புக்காடு பகுதியில் மடக்கிப் பிடித்தனர். அதிகாரிகள் மண்ணெண்ணெயைப் பறிமுதல் செய்து...

புதுக்கடையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம்

கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட மாநில, மண்டல, மாவட்ட மற்றும் பாசறை நிர்வாகிகள் புதுக்கடையில் உள்ள மண்டபத்தில் பொறுப்பேற்றனர். இந்த நிகழ்வில், கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பொறியாளர் பி. வ ஹிம்லர் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் பொறுப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார்....

குமரி: பத்திரப்பதிவு.. நாளை கூடுதல் டோக்கன்

ஐப்பசி மாத சுபமுகூர்த்த தினங்களில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் வரும் 24ம் தேதி (நாளை) மற்றும் 27-ம் தேதி ஆகிய இரு தினங்களில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி வழக்கமாக 100 டோக்கன்கள் வழங்கப்படும்...

நாகர்கோவில்: வெள்ள மீட்பு  உபகரணங்களை பார்வையிட்ட எஸ் பி

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி, ஆபத்தில் சிக்கியவர்களை மீட்க வெள்ளம் மீட்பு பயிற்சி பெற்ற மாவட்ட காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் தயார் நிலையில் உள்ளனர். இன்று (22-ம் தேதி) நாகர்கோவிலில்...

நித்திரவிளை: கல்லால் அடித்து கிட்டாச்சி ஆபரேட்டர் கொலை

சூரியகோடு பகுதியைச் சேர்ந்த ஹிட்டாச்சி ஆபரேட்டர் சதீஷ்குமார் (39), கடந்த 18ஆம் தேதி முன்விரோதம் காரணமாக 5 பேர் கும்பலால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (21-ம் தேதி) பரிதாபமாக உயிரிழந்தார். கொல்லங்கோடு...

கருங்கல்: போலீஸ் பிடியில் இருந்து தப்பிய கொள்ளையன் கைது

பாலூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஆல்வின் வீட்டில் கடந்த மாதம் 18 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக கருங்கல் போலீசார் பாலூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரைக் கைது செய்தனர். விசாரணையின் போது ஜெயக்குமார் போலீசாரை ஏமாற்றி தப்பி ஓடினார். பெங்களூருவில்...

குமரி: மதுவை மகள் கீழே கொட்டியதால் தொழிலாளி தற்கொலை

மணவாளக்குறிச்சி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த கட்டிட தொழிலாளி ராஜேந்திரன் (49), மது பாட்டிலை பீரோவில் மறைத்து வைத்திருந்தார். அவரது மகள் அதை ஊற்றியதால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...

குமரி மாவட்ட வீராங்கனை சாதனை: பயிற்சியாளர்  பெருமிதம்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 40வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணி சார்பாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ச. சித்ரா, 20 வயதுக்குட்பட்டோருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இது தமிழக தடகள வரலாற்றில் ஒரு...

தக்கலை: பெண் போலீசிடம்  தகராறு; 4 பேர் மீது வழக்கு

தக்கலை காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் மேகலா (34) மீது, மணலி சந்திப்பில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தவர்களை தடுத்ததால், ஆத்திரமடைந்த 4 பேர் தகாத வார்த்தைகளில் பேசி அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் அளித்துள்ளார். இது குறித்து...