Google search engine

நித்திரவிளை: மரம் ஏறும் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 70 வயதான பேபி என்ற தென்னை மரம் ஏறும் தொழிலாளி, நேற்று தென்னை மரத்தில் ஏறி ஓலையை வெட்டிக் கொண்டிருந்தபோது, ஓலை மின்கம்பி மீது விழுந்தது. அதை எடுத்தபோது மின்சாரம் தாக்கி அவர் கீழே விழுந்தார். குழித்துறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட...

தேங்காப்பட்டணம்: வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்

தேங்காய்பட்டணம் அருகே அம்சி பகுதியைச் சேர்ந்த 43 வயதான கெப்சின், குடும்பப் பிரச்சனை காரணமாக 5 ஆண்டுகளுக்கு முன் மனைவி பிரிந்து சென்ற நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன்தினம் அவரது வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாக உறவினர்களால் கண்டறியப்பட்டார்....

இறச்சகுளத்தில் விபத்துக்குள்ளான டாரஸ் லாரி

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் வழியாக கனிமங்களை ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி ஒன்று நேற்று தனியார் கல்லூரிக்குச் செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குளக்கரை புதருக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியை அங்கிருந்து அகற்ற முடியவில்லை. மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு லாரி அகற்றப்பட்டது. இந்த விபத்தால், அப்பகுதியில்...

நாகர்கோவிலில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சஜ்ஜார் ஜாஹீர் (49), தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து...

குருந்தன்கோடு: தமிழ்நாடு அரசின் புகைப்படக்கண்காட்சி

குளச்சல், குருந்தன்கோடு பகுதிகளில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் தொடங்கி வைத்த விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன....

குமரி அருகே பாறைப்பொடி கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் நான்கு வழிச்சாலை பகுதியில் நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் பாறைப்பொடி கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் லாரியை பறிமுதல் செய்து,...

திருவட்டாறு: ஆதிகேசவப்பெருமாளுக்கு ஆற்றில் ஆராட்டு

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் ஐப்பசி திருவிழாவின் 10-ம் நாள் இரவு, ஆதிகேசவப்பெருமாளும் கிருஷ்ணசாமியும் மேற்கு வாசல் வழியாக ஆராட்டுக்கு புறப்பட்டனர். போலீசார் மரியாதையுடன் திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி உடைவாளுடன் முன் செல்ல, பக்தர்கள் புடைசூழ சுவாமி ஊர்வலம் தளியல் ஆற்றை அடைந்தது. அங்கு கோகுல் தந்திரி விஷேஷ...

களியக்காவிளை: மோட்டார் சைக்கிள் திருடர்கள் 4 பேர் கைது

களியக்காவிளை போலீசார் நேற்று படர்ந்தாலுமூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிஜோய் (20) மற்றும் 3 பள்ளி மாணவர்கள் என்பதும், குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பைக்...

அதங்கோடு: 4 வழி சாலை இணைப்பு பணியை எம். எல். ஏ துவக்கினார்

கிள்ளியூர் தொகுதி, அதங்கோடு பகுதியில் கோயிக்கதறை முதல் மடத்துவிளை வரை 4 வழி சாலையில் இருந்து இணைப்பு சாலை அமைக்க அப்பகுதி மக்கள் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். தேசிய நெடுஞ்சாலையை பொதுப்பணித் துறை அதிகாரிகள் அளவீடு செய்து, இணைப்பு சாலை அமைக்க அனுமதித்தனர். இந்த...

குமரி: மீன் சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி மயக்கம்

கிள்ளியூர், ஊரம்பு பகுதி சந்தையில் நேற்று வாங்கிய செம்பல்லி மீனை சமைத்து சாப்பிட்ட குழந்தைகள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் காரக்கோணம் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நெய்யற்றின் கரை அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சுகாதாரத் துறை...