Google search engine

குமரியில் மருத்துவர் மீது பாய்ந்த வழக்கு

நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் 19 வயது இளம்பெண்ணை, மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராதாகிருஷ்ணன் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து செவிலியரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ராதாகிருஷ்ணன் மீது ஏற்கனவே பல பெண்களை இதேபோல் துன்புறுத்தியதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்....

புத்தேரியில் ரெயில் மோதி மூதாட்டி பலி

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் நேற்று மாலை புத்தேரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற 65 வயது மூதாட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மூதாட்டி, மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு...

திக்கணம்கோடு: கொத்தனார் திடீர் சாவு போலீஸ் விசாரணை

திக்கணம்கோடு பகுதியைச் சேர்ந்த கொத்தனார் சுகுமாரன் (48) மதுபோதையில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது உயிரிழந்தார். அவரது மகன் அஜித் அவரை அசைவற்ற நிலையில் கண்டறிந்தார். தக்கலை போலீசார் உடலைக் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குமரி: மதுபோதையில் ரகளை; பெண் மீது பாலியல் தொல்லை

மணலிக்கரை பகுதியைச் சேர்ந்த ரைமண்ட் என்பவர், அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் கிளார்க்காகப் பணிபுரிகிறார். மது அருந்திவிட்டு வீட்டு முன்பு ரகளையில் ஈடுபட்ட அவரை, அதே பகுதியைச் சேர்ந்த ஜெனிபா தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரைமண்ட், ஜெனிபா வீட்டில் நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்து,...

நித்திரவிளை: முன்னாள் காதலியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த ஜெர்சிலின் நிஜி (31) என்பவரை காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த ஷெரின் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், 3 லட்சம் ரூபாய் தரவில்லை என்றால் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை முகநூலில் வெளியிடுவதாக ஷெரின் மிரட்டியுள்ளார். பணம் தராததால், புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு, நிஜியின் கணவருக்கும்...

கூட்டாலுமூடு: பாரதிய ஜனதா பூத் கமிட்டி மாநாடு

கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி பூத் கமிட்டி மாநாடு நேற்று கூட்டாலுமூட்டில் நடைபெற்றது. இதில் தொகுதி இணை அமைப்பாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் சுடர்சிங், மாவட்ட துணைதலைவர் மில்ற்றா செல்லத்துரை, மாவட்ட செயலாளர் ராதிகா முருகன், கன்னியாகுமாரி கிழக்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு...

தவறான நோக்கத்துடன் சிறுமியை படம்பிடித்த வாலிபருக்கு தர்மஅடி.

நாகர்கோவில் மேலராமன்புதூர் சைமன்நகரில் நேற்று சாலையோரம் நின்று கொண்டிருந்த 15 வயது சிறுமியை தவறான நோக்கத்தில் வீடியோ எடுத்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். நேசமணி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஜஸ்டின் பாபு (52) என்பவரை...

விரிவிளை: சாலை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் தர்ணா

நித்திரவிளை அருகே மங்காடு - விரிவுலை சாலை மற்றும் முஞ்சிறை - கோழிவிளை சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை சீரமைக்க வலியுறுத்தி, விரிவிளை சந்திப்பில் நேற்று (9ஆம் தேதி) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. மெதுகுமல் வட்டாரச் செயலாளர் தங்கமணி...

குமரி: ரயிலில் தவறவிட்ட ரூ.2.82 லட்சம் மீட்பு: பயணிக்கு ஒப்படைப்பு

குமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடியைச் சேர்ந்த ஆண்டனி, நேற்று கொல்லத்திலிருந்து புனலூர் மதுரை ரயிலில் இரணியல் வரை வந்துள்ளார். ரயிலில் இருந்து இறங்கியபோது, தனது பையை எடுக்க மறந்துவிட்டார். அந்தப் பையில் ரூ.2,82,500 ரொக்கம் இருந்தது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததை அடுத்து,...

திருத்துவபுரம்: தொமுச சார்பில் ஆட்டோ நிறுத்தம் துவக்கம்

குழித்துறை அருகே திருத்துவபுரத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் புதிய ஆட்டோ நிறுத்தம் நேற்று தொடங்கப்பட்டது. குழித்துறை நகர்மன்ற தலைவரும், நகர திமுக முன்னாள் செயலாளருமான பொன் ஆசைத்தம்பி இந்த புதிய ஆட்டோ நிறுத்தத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ சங்க சட்ட ஆலோசகர் ராஜேஷ்...