திருவட்டாறு:   விபத்தில் ஒர்க்ஷாப் தொழிலாளி படுகாயம்

திருவட்டாறு அருகே புத்தன்கடை பகுதியை சேர்ந்தவர் ரோஸ் பர்வீன் (56). ஓர்க் ஷாப்பில் வேலை செய்து வருகிறார். நேற்று (7-ம் தேதி) காலை ரோஸ் பர்வீன் வழக்கம்போல் வேலைக்குச் செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது திருவட்டார் - மாத்தூர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வேகமாக...

நித்திரவிளை: கேரள மீனவர்களை காப்பாற்றிய குமரி மீனவர்கள்

கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட வள்ளவிளை பகுதியைச் சேர்ந்த மெஜில் என்பவரின் விசைப்படகு ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு தேங்காப்பட்டணம் மீன்பிடிதுறைமுகம் நோக்கி கடந்த 1-ம் தேதி வந்துகொண்டிருந்தது.  கொச்சி அருகே வந்தபோது ஆழ்கடலில் ஒரு ஃபைபர் படகு எஞ்சின் பகுதி உடைந்து 6 கேரள மீனவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தனர். உடனே விசைப்படகில்...

வட்டவிளை: முன்னாள் ஊர்தலைவர் வீட்டை முற்றுகையிட்ட ஊர் மக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வட்டவிளை ஊர் தலைவராக இருந்த சிவ கிருஷ்ணன் தேவி முத்தாரம்மன் கோவிலுக்கு சொந்தமான 1 கோடி ரூபாயையும், 25 பவுன் நகையும் புதிய ஊர் கமிட்டியிடம் ஒப்படைக்க RDO உத்தரவிட்டும் இதுவரை ஒப்படைக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகின்றது. இதையடுத்து, புதிய நிர்வாகிகள்...

நாகர்கோவில்: ரயில்வே தொழிற்சங்க தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

ரயில்வேயில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கான கிளைத்தேர்தல் கடந்த மூன்று நாளாக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் SRMU, DREU, DRKS, SRES ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. மொத்தம் உள்ள 1120 வாக்காளர்களில் நேற்றுடன் (டிசம்பர் 6) முடிந்த வாக்குப்பதிவில் மொத்தம் 912 பேர் தங்களது வாக்குகளை...

நித்திரவிளை: ஓய்வு பெற்ற அரசு பேருந்து டிரைவர் மீட்பு

நித்திரவிளை அருகே நம்பாளி பகுதியில் நேற்றிரவு 6:30 மணியளவில் வயதான நபர் ஒருவர் பாதை தெரியாத நிலையில் உட்கார்ந்திருந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அவரிடம் விசாரித்தபோது, காஞ்சிபுரம் மற்றும் நடைக்காவு ஆகிய பகுதிகளில் உறவினர்கள் இருப்பதாக தெரிவித்தார். பொதுமக்கள் அவரின் கால் சட்டையை சோதனை செய்துபார்த்தபோது, அவரது...

களியல்: சிற்றாறு 2-ல் பயணிகள் ரிசார்ட்; எம்எல்ஏ அடிக்கல்

குமரி மாவட்டம் களியல் கிராமத்தை ஒட்டி சிற்றாறு 2 அணை உள்ளது. இந்த அணையை சுற்றி பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். எனவே சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் ரிசார்ட் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் ரூபாய் 3 கோடி 40 லட்சம் செலவில்...

மார்த்தாண்டம்: விவசாயி விஷம் குடித்து பலி

மார்த்தாண்டம் அருகே முழங்குழியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (50). விவசாயி. இவரது மனைவி சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். இதனால் ராதாகிருஷ்ணன் மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று (6-ம் தேதி) ராதாகிருஷ்ணன் விஷம் குடித்து சாலையில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள்...

குமரி: ஆசிய விளையாட்டு போட்டியில் மாணவி சாதனை

அருமனை அருகே கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் அப்பா முஜீப் மகள் சமீகா பர்வீன். இவர் மலேசியாவில் நடந்த காது கேளாதோருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும், 100 மீட்டர் தடை தாண்டலில் தங்கமும் வென்று நேற்று (5ஆம் தேதி) சாதனை...

களியக்காவிளை: பைக்குகள் விபத்தில் செக்யூரிட்டி பலி

சூரியகோடு பகுதியை சார்ந்தவர் முருகன் (39) இவர் தனியார் மருத்துவமனை நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று (5-ம் தேதி) இவர் களியக்காவிளையில் இருந்து சூரியகோட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே கலிங்கராஜபுரத்தைச் சேர்ந்த அனிஷ் ஓட்டிவந்த பைக் இவர் மீது மோதியது. இந்த பைக்...

காட்டாதுறை: கேரளாவிற்கு கடத்த முயன்ற மண்ணெண்ணெய் பறிமுதல்

விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி தலைமையில் அதிகாரிகள் நேற்று (6-ம் தேதி) காட்டாத்துறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாடா சுமோ வாகனத்தை தடுத்து நிறுத்தியும், வாகனம் நிற்காமல் சென்றதைத் தொடர்ந்து துரத்தி சென்று மடக்கிப் பிடித்தனர். அப்போது...