Google search engine

கன்னியாகுமரி: மாற்றுத் திறனாளிகளின் சிறப்பு குறைதீர் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் தலைமையில், மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் 24.01.2025 அன்று காலை 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக நாஞ்சில் கூட்டரங்கம், நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களின் கோரிக்கைகளுடன் அன்று...

நாகர்கோவில்: தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோதைகிராமம் காசிவிஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்பாள் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நேற்று (ஜனவரி 21) நடைபெற்றது. தயிர், பால், பன்னீர், களபம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களினால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. இதில் பக்தர்கள்...

குளச்சல்: பைக்குகள் மோதல்; 3 பேர் காயம்

குளச்சல் அருகே செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (69) கேபிள் தொழில் நடத்தி வருகிறார். நேற்று மாலை இவர் திக்கணங்கோடு - குளச்சல் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கட்டபுளி என்ற பகுதியில் சென்றபோது சகாயநகரை சேர்ந்த டேவிட் (22) என்பவர் ஓட்டி வந்த பைக் செல்வராஜ்...

இரணியல்: ஸ்மார்ட் கார்டு சர்வே; பெண்கள் மோசடி

திங்கள் சந்தை அருகே உள்ள ஆலங்கோடு, மயிலோடு போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஸ்மார்ட் கார்டு சர்வே எடுப்பதாக 4 இளம்பெண்கள் சுற்றித் திரிகின்றனர். இவர்கள் இரண்டு ஸ்கூட்டர்களில் வந்து வீடு வீடாக சென்று ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு நகல் ஆவணங்களை வாங்கி சேகரிக்கின்றனர்.  பின்னர்...

வெள்ளிச்சந்தை: பைக் விபத்தில் 2 பேர் காயம்

வெள்ளிசந்தை அடுத்த மேல் முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சிலுவை இருதயம் மகன் சகாய சிஜின் (21). கடல் தொழில் செய்து வருகிறார். முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் மகன் சுஜன் (21) இவர்கள் இருவரும் சம்பவத்தன்று பைக்கில் ஒரு திருமண வீட்டிற்குச் சென்று விட்டு திரும்பி வந்து...

குலசேகரம்: பாதை தகராறில் வாலிபருக்கு வெட்டு; தாய்க்கு அடிஉதை

குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் ஆகாஷ் (25) பெயிண்டர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பத்மராஜா (57) மற்றும் சுவாமிதாஸ் மகன்கள் கலைப்பிரபின், கலைச்செல்வன், கலைப்பிரபு ஆகியோருக்கும் நடைபாதை சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் நேற்று (ஜனவரி 21) மாலை ஆகாஷ்...

கூட்டாலுமூடு: கல்வி கற்று சாதிக்க வேண்டும்; அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தானம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா தாளாளர் ராஜகுமார் தலைமையில் நடந்தது. தலைவர் குமரேசதாஸ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் நாராயணன் அறிக்கை வாசித்தார். சி.பி.எஸ்.சி பள்ளி முதல்வர் சுனில்குமார், பி.எட் கல்லூரி முதல்வர் பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...

நாகர்கோவிலில் எம். ஜி. ஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழக சார்பில் நேற்று நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் நடந்த முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆரின் 108 வது பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சினிமா இயக்குனர் பி. சி. அன்பழகன் கலந்துகொண்டு உரையாற்றினார்....

தக்கலை: தந்தையை இரும்பு கம்பியால் தாக்கிய மகன் கைது

தக்கலை அருகே உள்ள ஆசான்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை (62). இவரது மகன் முருகேஷ் (32). இவருக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். ஆனால் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார். இதனால் முருகேஷ் தந்தை கிருஷ்ணபிள்ளையுடன் வசித்து வருகிறார். மது...

குலசேகரம்: மாயமான விமானப்படை ஊழியர் சடலமாக மீட்பு

குலசேகரம் அருகே உள்ள மங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் நாயர். விமானப்படையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்போது வக்கீலாக பணியாற்றி வந்தார். சொந்தமாக விவசாயமும் செய்து வந்தார்.  கடந்த 15ஆம் தேதி தோட்டத்திற்கு சென்ற ராமச்சந்திரன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் குலசேகரம்...