குளச்சல்: மீன்பிடித் தொழிலாளியின் பைக் திருட்டு

குளச்சல் அருகே உள்ள பிள்ளைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ் (49). மீன்பிடித் தொழிலாளி. இவர் நேற்று இரவு வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தியிருந்தார். பின்னர் இன்று காலை பார்த்தபோது அவரது பைக் நிறுத்தியிருந்த இடத்தில் காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ பைக்கைத் திருடிச் சென்றதுத் தெரியவந்தது....

நாகர்கோவிலில் ரூ. 17½ லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட ஸ்காட் குறுக்குத் தெருவில் ரூ. 5 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியை நேற்று மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.  இதையடுத்து 27-வது வார்டுக்குட்பட்ட நடராஜபுரம் பிள்ளையார் கோவில் அருகே ரூ. 2½ லட்சத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி,...

குமரியில் கடந்த 15 நாட்களில் கஞ்சா விற்றதாக 19 பேர் கைது

குமரி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாக ஒவ்வொரு கிராமப் பகுதியிலும் ஊர்காவல் கண்காணிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை தடுக்கப்பட்டு பலரும்...

குமரி: மது போதையில் வாகனம் ஓட்டிய டெம்போ டிரைவருக்கு அபராதம்

நாகர்கோவில் மாநகரில் நேற்று வடசேரி பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் டிரைவர் மது போதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து ரூ. 10...

விலவூர்: சாலை பணியை தொடக்கி வைத்த அமைச்சர்

தக்கலை அருகே விலவூர் பேரூராட்சிக்குட்பட்ட மணலி பாலம் முதல் பாண்டி விளை வரை கால்வாய் கரை சாலை சீரமைக்க நபார்டு நிதி ரூபாய் 2 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று துவக்கி வைத்தார். விலவூர் பேரூராட்சி...

களியல்: கழிவுகளை வீட்டிற்கு அனுப்பிய போலீசார்

களியல் அருகே கட்டச்சல் என்ற பகுதியில் நேற்று சாலையோரத்தில் மூட்டைகளில் கட்டப்பட்ட கழிவுகளை மர்ம நபர்கள் வீசி சென்றனர். தகவல் அறிந்த பேரூராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்தில் சென்று பார்வையிட்டு, செயல் அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்க செயல் தலைவர் கடையாலுமூடு போலீசில் புகார் கொடுத்தார்.  போலீசாரின்...

முளகுமூடு: திமுக சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க கூட்டம்

குமரி கிழக்கு மாவட்டம் தக்கலை தெற்கு ஒன்றியம் சார்பில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம் முளகுமூடு சந்திப்பில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சுந்தரசிங் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் எட்வின் முன்னிலை வகித்தார். கப்பியறை பென்னட் வரவேற்றார். மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷ், பேச்சாளர்...

புதுக்கடை: 4 வழிச் சாலைக்கு இழப்பீடு கேட்டு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை பணிகள் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கியது. இதற்காக நிலம் வழங்கியவர்களுக்கு அரசு அனைவருக்கும் ஒரே மாதிரியான இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. குறிப்பாக புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் இழப்பீடு தொகை வழங்குவதில்...

காப்புக்காடு: தொல்காப்பியர் கழக ஆண்டு விழா

புதுக்கடை அருகே உள்ள காப்புகாட்டில் தொல்காப்பியர் கழக 33ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் காப்புகாட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடக்கிறது. நிகழ்ச்சியில் தங்கம் தமிழ் தாய் வாழ்த்து பாடுகிறார். தொடர்ந்து ஒளிவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து பிற்பகல்...

SSLC தேர்வு முடிவுகள்: 100க்கு 100 மதிப்பெண்

இன்று (மே 16) வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின்படி 23000+ மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். பாடவாரியாக மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்ற எண்ணிக்கை பின்வருமாறு.,தமிழ் - 8 பேர் (98.09%)ஆங்கிலம் - 346 பேர் (99.46%)கணிதம் - 1996 பேர் (96.57%)அறிவியல்...