Google search engine

பளுகல்: பெண்களிடம் ரூ.13 லட்சம் மோசடி

களியக்காவிளை அருகே பளுகல் என்ற இடத்தை சேர்ந்தவர் மணியன் மனைவி ராணி (45). இந்த தம்பதிக்கு விபின் என்ற மகன் உள்ளார். ராணிக்கும் புரவலூர் பகுதியை சேர்ந்த சந்தியா (44) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்புடன் பழகிய நிலையில் ராணி சந்தியாவிடம் இருந்து கடந்த...

நீரோடி: ஏவிஎம் கால்வாய்; கலெக்டர் திடீர் ஆய்வு

குமரி மாவட்டத்தையும் கேரளாவையும் இணைக்கும் நீர்வழிப் போக்குவரத்து பாதையாக இருந்த வரலாற்று சிறப்புமிக்க ஏவிஎம் கால்வாய் பராமரிப்பின்றி உள்ளது. ஒரு காலத்தில் கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து மண்டைக்காடு வரை நீர்வழி போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்பு போன்றவற்றிற்கு இக்கால்வாய் பிரதானமாக விளங்கியது. தற்போது இந்த கால்வாய் செயல்பாடின்றி...

இரயுமன்துறை: மீன் பிடி துறைமுக சீரமைப்பு கூட்டம்

தேங்காப்பட்டணத்தில் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இங்கு ஏராளமான நாட்டுப்புற படகுகளும், விசைப்படகுகளும் தங்குதளமாக கொண்டு மீன்பிடித்து தொழில் செய்து வருகின்றன. தற்போது இரைமன் துறை பகுதியில் கட்டப்படும் படகு தங்குதளத்தின் நீளம் அதிகரிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.  இதை ஏற்று அரசு 70 கோடி ரூபாய்...

நாதக பொறுப்பில் இருந்து விலகிய காளியம்மாள்.. திமுகவுடன் இணையவுள்ளதாக தகவல்

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்த மாதம் தூத்துக்குடி மணப்பாட்டில் நடைபெறும் ‘உறவுகள் சங்கமம்’ எனும் நிகழ்வில் சமூக செயற்பாட்டாளராகவே காளியம்மாள் பங்கேற்கிறார். அங்கு திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கும் நிகழ்வில்,...

வடிவீஸ்வரத்தில் மனைவியை தாக்கிய கணவன் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு வடிவீஸ்வரத்தைச் சேர்ந்தவர் பாபு, இவர் மனைவி மஞ்சு(26). இவர்களிடையே குடும்ப பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் மனைவி மஞ்சுவை பாபு ஆபாசமாக பேசி, காலால் வயிற்றில் மிதித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மஞ்சு கொடுத்த புகாரின் பேரில்,...

திருவட்டாறு: ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

திருவட்டாறு அருகே உள்ள வேர்கிளம்பி பகுதியை சேர்ந்தவர் ஜான் பேபி (37). இவர் ஆட்டோ டிரைவர். நேற்று ஜான் பேபி சாமியார்மடம் பகுதியில் உள்ள சந்தை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு செட்டிச்சார் விளை என்ற இடத்தை சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ் (35) என்பவர்...

குமரி: ரப்பர் குடோனில் தீ விபத்து

குமரிமலையோர கிராமமான ஆறுகாணி பகுதியில் ஷீன் டோமி என்பவரது வீட்டின் பின்புற பகுதியில் ரப்பர் சீட்டை பதப்படுத்தி உபயோகப்படுத்தும் குடோன் ஒன்று வைத்திருந்தார். இதில் ஏராளமான ரப்பர் சீட்டுகள் காணப்பட்டன. இந்த நிலையில் 20-ம் தேதி மதியம் திடீரென அந்த குடோனில் தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகம்...

குழித்துறை: பாலியல் புகார்; பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

குழித்துறை அருகே உள்ள பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறினர். இது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த...

அருமனை: ஒப்பந்ததாரர்கள் மோதல்.. 8 பேர் மீது வழக்கு

அருமனை அருகே இடைக்கோடு பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இந்த பேரூராட்சியின் தலைவியாக உமாதேவி என்பவர் இருந்து வருகிறார். பேரூராட்சியில் தற்போது பணிகளை டெண்டர் எடுக்க 47 ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். இந்த 47 ஒப்பந்ததாரர்களுக்கும் சம அளவில் பணிகளை பங்கிட்டு கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில்...

புதுக்கடை: அரசு பணிக்கு கல் கொண்டு சென்ற போது தகராறு

புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியை அதே பகுதி வசந்த் என்பவர் நடத்தி வருகிறார். இந்த குவாரியில் இருந்து குமரி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் தமிழக அரசு மீன்வளத் துறையின் வேலைக்கு கற்கள் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று...