நித்திரவிளை: வீடு புகுந்து திமுக நிர்வாகி மீது தாக்குதல்
நித்திரவிளை அருகே பூந்தோப்பு காலனியை சேர்ந்தவர் சுனில் (42). சென்னையில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்க்கிறார். இவர் குமரி மாவட்ட திமுக விளையாட்டு அணியின் துணை அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். சம்பவ தினம் மனைவி பிள்ளைகளுடன் வீட்டில் இருக்கும் போது, ஒரு சொகுசு காரில் நன்கு பழக்கம்...
நாகர்கோவில்: பாசன சபைகளின் கூட்டமைப்பு தலைவருக்கு புகழஞ்சலி
குமரி மாவட்ட பாசன சபைகளின் கூட்டமைப்பு தலைவராக இருந்த புலவர் செல்லப்பா நினைவஞ்சலி நிகழ்ச்சி நாகர்கோவிலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் பங்கேற்று பேசினார்.
அப்போது, "டெல்லியில் நடந்த போராட்டத்துக்கு பிறகு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி கொடுத்துள்ளது....
மண்டைக்காடு: பகவதி அம்மன் கோயிலில் இன்று பொங்கலிட்ட பெண்கள்
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாளை மறுநாள் 11ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. இன்று எட்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 4:30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது....
மணவாளக்குறிச்சி: கார் விற்பனையாளர் தாக்குதல் தந்தை மகன் கைது
பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் தங்கேஸ்வரன் (40). இவர் பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் மணவாளக்குறிச்சி அருகே சேரமங்கலம் பகுதியை சேர்ந்த குமாரி தங்கம் என்பவரின் மூத்த மகளை திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மகளை அதே பகுதியை சேர்ந்த ஆனந்த...
குளச்சல்: குமரி கடற்கரை பகுதிகளில் பேரலை எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை 11 ஆம் தேதி வரை கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: - குமரி மாவட்டத்தில் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை கடல் பகுதியில் 14 முதல் 18 வினாடிகளுக்கு...
காரங்காடு: முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் பேரமைப்பு கூட்டம்
காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் பேரவை கூட்டம் பள்ளியில் நடந்தது. பள்ளி தாளாளர் அருட்பணி சுஜின் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ரோஸ்லெட், ஆசிரியை லீமாரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் பெலிக்ஸ்ராஜன் வரவேற்றார்.
முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேரவைக்கு புதிய நிர்வாகிகள்...
களியக்காவிளை: விளையாட்டு மைதானம் தனிநபர் ஆக்கிரமிப்பு
விளவங்கோடு தாலுகாவுக்கு உள்பட்ட மலையடி கிராமம் சாணிவிளையில் முல்லையாறு கிளைக் கால்வாயின் கரையோரம் காலியாக உள்ள இடத்தை அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பல ஆண்டுகளாக மைதானமாக பயன்படுத்தி வருகிறார்கள். இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு என இந்த ஊராட்சியில் வேறு விளையாட்டு...
கிள்ளியூர்: 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய ஊராட்சிகளை சார்ந்த 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் சார்பில் கீழ்குளத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ சிறப்பு...
களியக்காவிளை: நிதி நிறுவனத்தில் போலி நகை அடகு வைத்து மோசடி
களியக்காவிளையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 2022-ம் ஆண்டு கேரள மாநிலம் பாறசாலை பகுதியைச் சேர்ந்த பிர்லா ஜெஸ்லின் (50) மற்றும் அவரது மகன் அனுஷ் (21) ஆகியோர் நகைகளை அடகு வைத்து மொத்தம் ரூ.55 லட்சத்து 26 ஆயிரத்து...
கருங்கல்: பஸ்ஸில் குழந்தையிடம் செயின் திருடிய பெண் கைது
கருங்கல் அருகே செம்முதல் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (37). கொத்தனார். இவரது மனைவி சரண்யா (30) தனது குழந்தை உடன் காவடிக்கட்டு நிகழ்ச்சி பார்க்க வில்லுக்குறி அருகே தனது தாயார் வீட்டிற்கு கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு சென்றார். நேற்று முன்தினம் ஊருக்கு தாயார், தங்கையுடன் கணவர்...













