Google search engine

முளகுமூடு: திமுக சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க கூட்டம்

குமரி கிழக்கு மாவட்டம் தக்கலை தெற்கு ஒன்றியம் சார்பில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம் முளகுமூடு சந்திப்பில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சுந்தரசிங் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் எட்வின் முன்னிலை வகித்தார். கப்பியறை பென்னட் வரவேற்றார். மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷ், பேச்சாளர்...

புதுக்கடை: 4 வழிச் சாலைக்கு இழப்பீடு கேட்டு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை பணிகள் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கியது. இதற்காக நிலம் வழங்கியவர்களுக்கு அரசு அனைவருக்கும் ஒரே மாதிரியான இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. குறிப்பாக புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் இழப்பீடு தொகை வழங்குவதில்...

காப்புக்காடு: தொல்காப்பியர் கழக ஆண்டு விழா

புதுக்கடை அருகே உள்ள காப்புகாட்டில் தொல்காப்பியர் கழக 33ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் காப்புகாட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடக்கிறது. நிகழ்ச்சியில் தங்கம் தமிழ் தாய் வாழ்த்து பாடுகிறார். தொடர்ந்து ஒளிவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து பிற்பகல்...

SSLC தேர்வு முடிவுகள்: 100க்கு 100 மதிப்பெண்

இன்று (மே 16) வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின்படி 23000+ மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். பாடவாரியாக மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்ற எண்ணிக்கை பின்வருமாறு.,தமிழ் - 8 பேர் (98.09%)ஆங்கிலம் - 346 பேர் (99.46%)கணிதம் - 1996 பேர் (96.57%)அறிவியல்...

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை ரத்த மையத்தில் ஆட்சியர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைந்துள்ள ரத்த மையத்திற்கு திடீரென்று சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் ரத்த மையத்திற்கு எவ்வளவு ரத்தம் வருகிறது எவ்வளவு செலவாகிறது என்பது குறித்த விபரங்களை ரத்த மையத் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து...

2500 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் வருகை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக திருவாரூரிலிருந்து நாகர்கோவிலுக்கு 2500 டன் ரேசன் அரிசி சரக்கு ரயில் மூலம் நேற்று வந்தது. அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றி கோணத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப நியாய விலை கடைகளுக்கு...

திக்கணம்கோடு: டாரஸ் லாரி மோதி மாணவி காயம்

செண்பகராமன்புதூரை சேர்ந்தவர் வினோதினி (36). இவர் தனியார் மருத்துவமனை டாக்டர். இவரது மகள் நிஷா பிளஸ்-1 தேர்வு எழுதியுள்ளார். நேற்று வினோதினி தனது மகளை பைக்கின் பின்னால் அமர்த்திக் கொண்டு திக்கணங்கோட்டில் உள்ள தனது தங்கையைப் பார்க்கச் சென்றுள்ளார். திக்கணங்கோடு - கருங்கல் சாலையில் பைக்கை நிறுத்திவிட்டு...

தக்கலை: 70 கிராம் கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தக்கலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில் தனிப்படையினர் தக்கலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 70 கிராம் எடை...

திருவட்டார்: குட்கா விற்ற கடைக்காரர் கைது

திருவட்டார் போலீசார் மணக்காவிளை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. தொடர்ந்து கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 17 கிலோ 850 கிராம் எடை...

புதுக்கடை: தமிழக வாழ்வுரிமை கட்சியின்  வாகன பேரணி

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி கோரி நேற்று குமரி மாவட்டம், புதுக்கடை மொழிபோர் தியாகிகள் நினைவு ஸ்தூபியில் இருந்து இருசக்கர வாகன பேரணி தொடங்கியது. இந்த இருசக்கர வாகன பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை...