Google search engine
உக்ரைன் மீதான போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இன்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த தகவலை ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. கடந்த 2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்ததுடன், ஆயுத உதவியும் வழங்கின. இதற்கிடையே, இந்த போரை நிறுத்த பிரதமர்...
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 100 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது. இஸ்ரேல் - காசா இடையே கடந்த ஜனவரி 19-ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்குவந்த நிலையில் நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதலாக இது அமைந்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிணைக் கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் தொடர்ச்சியாக சுணக்கம் காட்டி வருகிறது. அதேபோல் இவ்விவகாரத்தில் அமெரிக்க அதிபரின்...
ஏமனில் ஹவுதி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்க கடற்படை நேற்று நடத்திய வான் வழி தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். செங்கடலில் அத்துமீறினால் குண்டு மழை பொழியும் என ஏமன் மற்றும் ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கடல், சூயஸ் கால்வாய், ஏடன் வளைகுடா ஆகியவை வழியாக செல்லும் வர்த்தக கப்பல்கள், இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்கள்...
மும்பை தாக்குதலில் தொட்புடைய ஹபீஸ் சயீது கூட்டாளியும் லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தீவிரவாதியுமான அபு கத்தல் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் அபு கத்தல். இவருடைய உண்மையான பெயர் ஜியா-உர்-ரஹ்மான். இந்தியாவால் தேடப்படும் முக்கிய தீவிரவாதிகள் பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார். 26/11மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். இவர் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த மூளையாக செயல்பட்டுள்ளார். இது...
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வரும் 19-ம் தேதி பூமிக்கு திரும்புகிறார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கு மேலாக தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் இதர வீரர்களுக்கு உடல்நிலையில் ஏற்படக் கூடிய தாக்கம் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 1998-ம் ஆண்டு நவம்பரில் விண்வெளியில்...
தெற்கு ஐரோப்பிய நாடான மேசடோனியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் நடந்த ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று, “வடக்கு மேசடோனியாவின் கோக்கானி பகுதியில் உள்ள ஓர் இரவு விடுதியில் ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர். இந்த இரவு விடுதி தலைநகர்...
“ஈரான் போர் தொடுக்காது. அதே நேரத்தில் யாரேனும் எங்களை அச்சுறுத்தினால் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம்.” என ஈரான் பாதுகாப்புப் படையின் தலைவர் ஹொசைன் சலாமி தெரிவித்துள்ளார். முன்னதாக, ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சி படைக்கு ஈரான் ஆதரவு தரக்கூடாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். ஏமனில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கான உத்தரவை ட்ரம்ப் பிறப்பித்தார். இது குறித்து அவர்...
கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றுக் கொண்டார். கனடா நாட்டின் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், அந்நாட்டின் 24-வது பிரதமராகவும் கனடா வங்கியின் முன்னாள் தலைவரான மார்க் கார்னி அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஜனவரியில் தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார். இதனையடுத்து லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி 1,31,674 வாக்குகளைப் பெற்றார். இது மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவீத...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் போயிங் நிறுவனம், அந்த நாட்டின் விண்வெளி அமைப்பான நாசா இணைந்து போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தை உருவாக்கியது. இந்த புதிய விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். இருவரும் 10 நாட்கள் ஆய்வு...
“30 நாட்கள் போர் நிறுத்தம் என்ற அமெரிக்காவின் பரிந்துரையை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், அதற்கு முன்னர் சில பிரச்சினைகளைக் களைய வேண்டும்.” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். முன்னதாக, சவுதி அரேபியாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அந்நாடு முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக் கொண்டது. ரஷ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்தது. இந்த போர்நிறுத்த ஒப்பந்தம், நிலம், கடல் மற்றும்...