Google search engine
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது. இதனால் கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை. கடந்த 2001-ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. எஸ்சிஓ அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு சீனாவின் குயிங்தவோ நகரில் கடந்த 25, 26-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில்...
அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த 13-ம் தேதி தாக்குதலை தொடங்கியது. ஈரானின் அணு ஆயுத தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தன் மீது தாக்குதல் நடத்தலாம் என கருதிய ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி ரகசிய இடத்தில் பதுங்கினார். ஈரான் - இஸ்ரேல் இடையே...
அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட்டுடன் இணைக்கப்பட்ட டிராகன் விண்கலம் மூலம் நேற்று முன்தினம் புறப்பட்ட இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் 28 மணி நேர பயணத்துக்கு பிறகு, நேற்று மாலை சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர். அவர்கள் 2 வாரத்துக்கு அங்கு தங்கியிருந்து 60 ஆய்வு பணிகளில் ஈடுபட உள்ளனர். நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவற்றுடன் இணைந்து...
இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேரை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் வெற்றிகரமாக தொடங்கியது. இந்திய நேரப்படி சரியாக இன்று (ஜூன் 25) பகல் 12.01 மணிக்கு பால்கன் 9 ராக்கெட், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. 28 மணி நேரப் பயணம்: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணிக்கும் நான்கு விண்வெளி வீரர்களும் ஸ்பேஸ்எக்ஸின்...
ஈரானின் அணுசக்தி மையங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்ற செய்திகள் வெளியான நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதனை முழுமையாக மறுத்துள்ளார். மேலும், ஈரான் அணுசக்தி மையங்கள் 'முற்றிலுமாக அழிக்கப்பட்டன' என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். ஈரான் அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு சில மாதங்கள் மட்டுமே பின்னடைவை ஏற்படுத்தியதாகவும், அவை முற்றிலுமாக அழிக்கப்படவில்லை எனவும் உளவுத்துறை கண்டறிந்ததாக வெளியான ஊடக செய்திகளை அமெரிக்க அதிபர்...
இஸ்ரேலும் ஈரானும் சிறுபிள்ளைகள் போல நடந்துகொண்டதால் வலுவான மொழியைப் பயன்படுத்தினேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார் நெதர்லாந்தின் தி ஹாக்கில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "இஸ்ரேலும் ஈரானும் ஒரு பள்ளிக்கூடத்தில் இரண்டு குழந்தைகளைப் போல நடந்துகொண்டார்கள், அவர்களுக்குள் ஒரு பெரிய சண்டை நடந்தது. அவர்கள் நரகத்தைப் போல சண்டையிட்டார்கள். நீங்கள் அவர்களை உடனே தடுக்க முடியாது. அவர்கள் சுமார் இரண்டு,...
அண்மையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டின் அணுசக்தி மையங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கு உரிய இழப்பீட்டை அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ஐ.நா-வில் புகார் அளிக்கப்படும் என்றும் ஈரான் கூறியுள்ளது. கடந்த 21-ம் தேதி அன்று இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் தாக்குதலில் இறங்கின. அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களான ஃபோர்டோ,...
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (39) உள்ளிட்ட 4 வீரர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வுப் பணிக்காக டிராகன் விண்கலத்தில், ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு (ஐஎஸ்எஸ்) நேற்று புறப்பட்டு சென்றனர். அமெரிக்காவில் உள்ள ஆக்ஸியாம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம், நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மற்றும் ஃபல்கான் 9 ராக்கெட்...
இஸ்​ரேல் மீது கடந்த 2023 அக்​டோபரில் ஹமாஸ் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலை தொடர்ந்​து, காசா​வில் அந்த அமைப்​பினர் மீது இஸ்​ரேல் தாக்​குதல் தொடங்​கியது. தற்​போது ஈரானுடன் இஸ்​ரேல் போரிட்டு வரும் நிலை​யிலும் காசா​வில் தாக்​குதலை தொடர்​கிறது. இந்​நிலை​யில் மத்​திய காசா​வின் சலா அல்​-​தின் சாலை​யில் உணவுப் பொருளுக்​காக காத்​திருந்த நூற்​றுக்​கணக்​கான பாலஸ்​தீனர்​கள் மீது இஸ்​ரேலிப் படைகளும் டிரோன்​களும் நேற்று காலை​யில் தாக்​குதல் நடத்​தி​ய​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. இதுகுறித்து நுசேரத் அகதி​கள் முகாமில்...
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையில் ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அணுகுண்டு தயாரிக்க ஈரான் முயற்சிப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், கடந்த 13-ம் தேதி ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் திடீர் தாக்குதல் நடத்தின. இதில் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. கடந்த 22-ம் தேதி அமெரிக்க போர்...