மாஸ்கோவில் மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படையின் பொறுப்பதிகாரியான மூத்த ஜெனரல் இன்று கொல்லப்பட்டதாக அந்நாட்டு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.
கிரெம்ளினின் தென்கிழக்கில் 7 கி.மீ.,தொலைவில் உள்ள ரியாஷன்ஸ்கி பிரோஸ்பெக்ட் அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே நடந்த இந்தக் குண்டுவெடிப்பில், ரஷ்யாவின் அணுசக்தி மற்றும் ரசாயன, உயிரியல் பாதுகாப்பு படையின் தலைவரான லெப்டினட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் உயிரிழந்தார்.
இதுகுறித்து விசாரணைக்குழு கூறுகையில், ரஷ்ய கூட்டமைப்பின்...
அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு அதிபர் பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஸ்கான்ஸினில் உள்ள மேடிசன் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் நுழைந்த சிறுவன் ஒருவன் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினான். இதில் ஆசிரியர் ஒருவரும், சிறுவனின் சக மாணவர் ஒருவரும் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரும் சடலமாக நிகழ்விடத்தில் மீட்கப்பட்டார்.
சம்பவம் நடந்த பள்ளியில் 400...
கனடாவில் இந்திய மாணவர்கள் 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வெறுப்பு குற்றம் காரணமாக இந்த சம்பவங்கள் நடைபெறுவதால், இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கனடா ஆதரவு தெரிவித்து, இந்தியா மீது குற்றம் சுமத்தியதால் இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனடா நாட்டு மக்கள் அல்லது காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு விசாக்கள் வழங்குவதை இந்தியா மறுக்கிறது என கனடா ஊடகத்தில் செய்தி வெளியாகின....
சிரியாவில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களில் ஒருவர், அங்குள்ள அசாதாரண சூழ்நிலையை விவரித்தார். சிரியாவில் வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் 13 ஆண்டு கால உள்நாட்டுப் போருக்கு பிறகு கிளர்ச்சிப் படைகள் ஆட்சியை கைப்பற்றியுள்ளன. அங்கு பதற்றமாக சூழல் நிலவுகிறது. இதையடுத்து சிரியாவில் தவித்த 75 இந்தியர்களை அங்குள்ள இந்தியத் தூதரகம் பத்திரமாக மீட்டது. அவர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு பேருந்தில் அழைத்து...
சிரியாவில் உள்ள ஆயதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு செல்வதை தடுக்க, அங்கு முப்படைகள் மூலம் இரண்டு நாட்களாக கிட்டத்தட்ட 500 முறை தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இதில் சிரியாவின் ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
சிரியாவில் அதிபர் அல் ஆசாத்துக்கு எதிராக, சன்னி முஸ்லிம்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே நீண்டகாலமாக நடந்து வந்த மோதல் கடந்த டிசம்பர் 8-ம் தேதி முடிவுக்கு வந்தது. சிரியா அதிபர் ஆசாத்...
சிரியாவிலிருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: லெபனான் வழியாக தாயகம் அழைத்துவர நடவடிக்கை
admin - 0
சிரிய கிளர்ச்சிக்குப் பின்னர் அங்கிருந்து முதல்கட்டமாக 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சிரிய தலைநகர் டமஸ்கஸ் மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரங்களில் இயங்கிவரும் இந்திய துணை தூதரகத்தின் முயற்சியின் மூலம் 75 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 44 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்களாவர். மீட்கப்பட்ட இந்தியர்கள் பத்திரமாக லெபனான் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியா அழைத்துவரப்படுவார்கள் என்று...
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டோக்கியோ பெருநகர (மெட்ரோ) அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் பணி, மூன்று நாட்கள் விடுப்பு என்ற புதிய பணி அட்டவணை சார்ந்த கொள்கை திட்டத்தை டோக்கியோ கவர்னர் யூரிகோ கொய்கே அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.
உலகிலேயே அதிக மக்கள் வசிக்கும் நகரமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளது. அந்த நாட்டில் பிறப்பு விகிதம் சரிந்த காரணத்தால்...
வங்கதேசத்தில் வாழும் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு அரசிடம் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தி உள்ளார்.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதன்காரணமாக கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். தற்போது வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி நடத்தி வருகிறது.
இந்த...
இந்திய சிறையில் உள்ள தீவிரவாதிக்கு தகவல் தர மனநலம் பாதித்தவர்களை போல சிறைக்குள் நுழைக்க பாக். முயற்சி
admin - 0
இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளுக்கு தகவல் தெரிவிப்பதற்காக, போதைக்கு அடிமையான மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் போல சிலரை சிறைக்குள் நுழைக்க பாகிஸ்தானின் உளவு அமைப்பு (ஐஎஸ்ஐ) முயற்சி செய்து வருவது தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதல் இதுபோன்ற 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். அவர்களில் பலர் ஜம்மு, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான்...
ஓசிசிஆர்பி அமைப்புடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படவில்லை: பாஜகவின் புகாருக்கு அமெரிக்கா மறுப்பு
admin - 0
ஓசிசிஆர்பி அமைப்புடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படவில்லை என பாஜகவின் புகாருக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டம் (ஓசிசிஆர்பி) என்பது புலனாய்வு பத்திரிகையாளர்களை உள்ளடக்கிய சர்வதேச ஆகும். இந்த அமைப்பு திட்டமிட்ட குற்றம் மற்றும் ஊழல் தொடர்பான கட்டுரைகளை ஊடகங்களில் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், ஓசிசிஆர்பி அமைப்புக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையே ரகசிய தொடர்பு இருப்பதாக பிரான்ஸ் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. மேலும்...









