ஜெய்ஷ்-இ-முகம்மது (ஜேஇஎம்) தீவிரவாத அமைப்புடன் பாகிஸ்தானின் ஆபத்தான உறவை பிரான்ஸ் நாட்டின் ஒரு பருவ இதழ் அம்பலப்படுத்தியுள்ளது.
பிாரன்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருந்து 'லே ஸ்பெக்டகிள் டு மாண்டே' என்ற பிரெஞ்சு பருவ இதழ் வெளியாகிறது. இதில் பாகிஸ்தானில் ஜேஇஎம்-மின் செயல்பாடுகள் குறித்த புலனாய்வு கட்டுரை வெளியாகியுள்ளது. தீவிரவாதத்தை எதிர்த்து போரிட வேண்டிய கடமை பாகிஸ்தானுக்கு இருந்தபோதிலும் அந்நாடு தீவிரவாத அமைப்புகளுக்கு புகலிடம் அளித்து வருவதை அந்தக் கட்டுரை...
ஹனியே, நஸ்ரல்லாவை கொன்றோம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாக்களை வீழ்த்திவிட்டோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் - காசா ஆகிய இரு நாடுகளில் இருந்து ஒலிக்கத் தொடங்கிய போர் சத்தம் இன்று வரை ஓயவில்லை. இரண்டு நாடுகளின் அதிகார மையங்களுக்கு மத்தியில் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் தங்களது இன்னுயிரை துறந்து வருகின்றனர். ஆனால், இன்னும் போரின் உக்கிரம் குறைந்தபாடில்லை. ஹமாஸை...
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப வேண்டும் என வங்கதேச இடைக்கால அரசு, இந்தியாவுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா (77) தொடர்ந்து 16 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்தார். இந்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவரது அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதனால் ஹசீனா அரசு...
பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று குவைத் சென்றார். அந்த நாட்டு துணை பிரதமர் மற்றும் இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேற்கு ஆசியாவில் குவைத் நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டின் மக்கள் தொகை 43 லட்சம் ஆகும். இதில் இந்திய வம்சாவளியினர் சுமார் 10 லட்சம் ஆகும். அதோடு சுமார் 9 லட்சம் இந்திய தொழிலாளர்கள் குவைத்தில் பணியாற்றி வருகின்றனர்.
மத்திய...
காசாவுக்குள் மனிதாபிமான உதவிகள் சென்று சேர்வதைத் தடுக்கும் இஸ்ரேல் – ஆக்ஸ்ஃபாம் அதிர்ச்சி அறிக்கை
admin - 0
அக்டோபரில் இருந்து காசாவுக்கு 12 லாரிகளில் மட்டுமே உணவு, தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆக்ஸ்ஃபாம் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டப்பட்ட அறிக்கையில், “வடக்கு காசாவுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட 34 லாரிகளில் கடந்த இரண்டரை மாதத்தில் வெறும் 12 லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் ராணுவம் வேண்டுமென்றே காட்டிய கெடுபிடிகளால் உணவு, தண்ணீரை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது. இத்தகைய கெடுபிடிகளால் காசாவில் மனிதாபிமான...
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் மொத்தம் 50 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து கஜினி மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹபீஸ் உமர் நேற்று கூறியதாவது: காபூல் - காந்தகார் நெடுஞ்சாலையில் புதன்கிழமை இரவு பயணிகள் பேருந்தும் எண்ணெய் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதுபோல் இதே நெடுஞ்சாலையின் மற்றொரு இடத்தில் பயணிகள் பேருந்தும் சரக்கு லாரியும் மோதிக்கொண்டன. இவ்விரு விபத்துகளிலும் பெண்கள், குழந்தைகள்...
சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் சிக்கியுள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது. 2025 பிப்ரவரி மாதம் அவர் பூமி திரும்புவார் என கடந்த ஆகஸ்ட் மாதம் நாசா தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அவரது வருகை மேலும் தாமதமாகி உள்ளது.
நாசா விண்வெளி வீரர்கள் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலக்ஸாண்டர் கோர்புனோவ்...
புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தையில் அறிமுமாக உள்ள இந்த தடுப்பூசி கட்டணமின்றி கிடைக்கும் என தகவல்.
புற்றுநோய்க்கான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதை ரஷ்ய நாட்டு செய்தி முகமை TASS உறுதி...
ஜார்ஜியாவில் இந்திய உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த 12 இந்தியர்கள் சடலாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் கார்பன் மோனாக்சைடு விஷவாயு தாக்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஐரோப்பிய நாடான ஜார்ஜியாவின் மலைப்பகுதியான குடவுரி என்ற இடத்தில் சொகுசு விடுதி உள்ளது. இதில் இந்திய உணவுகளை பரிமாறும் உணவகம் உள்ளது. இதில் வடஇந்திய தொழிலாளர்கள் 12 பேர் பணியாற்றி வந்தனர். இவர்கள் விடுதியின் இரண்டாவது மாடியில் உள்ள அறைகளில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் தங்கள்...
சிரியாவில் அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு புரட்சி வெடித்தது. ஆசாத் படைகளுக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்றது. இதில் சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 27-ம் தேதி சிரியா ராணுவத்துக்கு எதிராக மிகப்பெரிய போரை துருக்கி ஆதரவு பெற்ற எச்டிஎஸ் கிளர்ச்சிப் படை தொடங்கியது. அதேநேரம், ஈரானும், ரஷ்யாவும் ஆதரவு தராததால்...










