Google search engine
திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லைப் பகுதியையொட்டி செவ்வாய்க்கிழமை காலை 6.35 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திபெத்தில் உள்ள மலைப்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்தது. இதனால் திபெத், நேபாள நாடுகள் நிலநடுக்கத்தில் குலுங்கின. இந்த பயங்கர நிலநடுக்கம்...
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவருமான அனிதா ஆனந்த், அந்நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லிபரல் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்ய அந்தக் கட்சி முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக லிபரல் கட்சி தொண்டர்களிடையே விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் அதிக வாக்குகள் பெறுபவர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்....
கனடா பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ள நிலையில், அவருக்கு பதில் யார் புதிய பிரதமராக வருவார்கள் என்ற கேள்வி விவாதிக்கப்பட்டு வருகிறது. கனடாவில் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களுக்கான விலை உயர்வு, வீட்டு வசதிக்கான விலை உயர்வு, அதிகரித்து வரும் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உள்நாட்டில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா உடனான கனடாவின் உறவுச் சிக்கலானதும் ட்ரூடோவுக்கு...
பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள உலகின் மிகப் பெரிய அணையால் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு பாதிப்பு இருக்காது என்று சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக புதிய செய்தித் தொடர்பாளர் குவா ஜியாகுன், “யார்லுங் சாங்போ(பிரம்மபுத்திரா) ஆற்றின் கீழ் பகுதியில் நீர்மின் திட்ட விவகாரத்தில் சீனா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. கடுமையான அறிவியல் மதிப்பீட்டுக்குப் பின்னரே இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது....
கனடா நாடாளுமன்றத்தில் 338 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 170 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 153 எம்.பி.க்கள் உள்ளனர். புதிய ஜனநாயக கட்சியின் 25 எம்.பி.க்கள் அரசுக்கு ஆதரவு அளித்து வந்தனர். கடந்த ஆண்டு புதிய ஜனநாயக கட்சி, அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபரில் கனடா நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர்...
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜார்ஜ் சோரஸுக்கு உயரிய விருது வழங்கி இருப்பது கேலிக்கூத்து என தொழிலதிபர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் அரசியல், சமூக சேவை, விளையாட்டு மற்றும் கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை புரிந்த 19 பேருக்கு சுதந்திரத்துக்கான அதிபர் பதக்கங்களை அதிபர் ஜோ பைடன் கடந்த சனிக்கிழமை வழங்கினார். முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், கால்பந்து ஜாம்பவான் லயனல் மெஸி,...
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்புக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் முன்பு கார் தீப்பிடித்து எரிந்தது. இது தீவிரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்று எப்பிஐ போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் மூத்த தலைவர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். வரும் 20-ம் தேதி அவர் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் ட்ரம்புக்கு சொந்தமான நட்சத்திர...
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிக்அப் டிரக் மூலமாக நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர மேலும், இரண்டு இடங்களில் இதேபோன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவம் அமெரிக்க மக்களிடையே பீதியை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நியூ ஆர்லியன்ஸ் நகரில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட் சம்சுதீன் ஜாபர் (42) அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர் என்பதை அந்நாட்டு புலனாய்வு அமைப்பான...
சிரியாவில் மலைக்கு அடியில் சுமார் 130 அடி ஆழத்தில் செயல்பட்ட ஏவுகணை ஆலையை இஸ்ரேல் கமாண்டோக்கள் துல்லிய தாக்குதல் மூலம் தகர்த்தனர். சிரியா ராணுவத்தின் மூத்த தளபதியாக பணியாற்றிய ஹபீஸ் அல் ஆசாத் கடந்த 1971-ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். கடந்த 2000-ம் ஆண்டில் அவர் உயிரிழந்தார். அவரது மகன் பஷார் அல் அசாத் கடந்த 2000-ம் ஆண்டு ஜூலையில் சிரியாவின் புதிய அதிபராக பதவியேற்றார். இந்த...
சீனா முழுவதும் புதிய வகை வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த விவரங்களை அளிக்கும்படி சீன அரசிடம் உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது. கரோனாவை போன்றே இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. புதிய வைரஸால் சிறார் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். சீன சமூக வலைதளங்களில் வைரஸ் பாதிப்பு தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சீனாவின் பல்வேறு பகுதிகளில் அவசர...