இந்தியா உடனான உறவுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் நிர்வாகம் முன்னுரிமை அளித்து வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் அதிகாரி லிசா கர்டிஸ், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு ‘செக்’ வைக்க இந்தியாவே சரியான நாடு என ட்ரம்ப் நிர்வாகம் கருதுகிறது என தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்வதை முன்னிட்டு வாஷிங்டன் டி.சி.யை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான தி சென்டர்...
தாய்லாந்தைச் சேர்ந்த 3 வயது நீர் எருமை, உலகின் மிக உயரமான நீர் எருமை என்ற கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.
தாய்லாந்தில், நக்கோன் ராட்சசிமாவில் என்ற இடத்தில் உள்ள நின்லானீ பண்ணையில் ஒரு நீர் எருமை வாழ்ந்து வருகிறது. 3 வயதில் வழக்கமாக ஒரு நீர் எருமை இருக்கும் உயரத்தைவிட, 20 அங்குலம் உயரமாக உள்ளது. தற்போது, 6 அடி, 8 அங்குல உயரம் கொண்டதாக அறியப்படுகிறது. அனைவரிடமும் நன்றாக...
பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிய இந்திய ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகளில் அதிரடி சோதனையை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை வெளிநாடுகளைச் சேர்ந்த 19 ஆயிரம் பேரை பிரிட்டன் அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் பணியை அந்நாட்டு அரசு செய்து வருகிறது. அதுபோன்ற பணியை தற்போது பிரிட்டன் அரசும் தொடங்கியுள்ளது. பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கி உள்ள அகதிகளை கண்டறியும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் கடந்த வாரம் முதல் ஈடுபட்டு...
திருமணம் செய்யாமல் பல பெண்களின் வருமானத்தில் ஜாலி வாழ்க்கை வாழும் ஜப்பானியருக்கு 54 குழந்தைகள் பெற்று சாதிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஜப்பானைச் சேரந்தவர் ரூய்டா வாட்டாநபே(36). பள்ளிப் படிப்பை கைவிட்ட இவர், 3 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பகுதி நேர வேலை செய்துள்ளார். இவர் சமூக ஊடகத்தில் பிரபலமான ‘ஹிமோ ஒடோகோ’. அப்படியென்றால் ஜப்பான் மொழியில் பெண்களின் வருமானத்தை சார்ந்திருக்கும் நபர்.
இவர் பார்க்க ‘அமுல் பேபி’...
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தெற்கு இஸ்ரேல் பகுதியில் நோவா இசைக் கச்சேரி நடைபெற்றது. அப்போது, திடீரென அந்தப் பகுதிகளில் நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகள் 100-க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, இரு தரப்பிலிருந்தும் பிணைக் கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, சிறைப்பிடிக்கப்பட்டு 500 நாட்களுக்குப்...
மெக்சிகோவில் பேருந்து ஒன்று, லாரி மீது மோதிய விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெக்சிகோவின் தெற்கு மாகாணத்தில் உள்ள கான்குனில் இருந்து டபாஸ்கோவிற்கு அதிகாலை நேரத்தில், 48 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து பேருந்து தீ பற்றியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த...
காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும்: டிரம்ப் அறிவிப்பும், பாலஸ்தீனர்கள் எதிர்ப்பும் – பின்னணி என்ன?
admin - 0
‘‘காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி சீரமைக்கும். இங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் வேறு நாடுகளில் குடியேற வேண்டும்’’ என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு பலதரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.
இஸ்ரேல் மீது, காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் ராணுவத்தின் 34 பேர் உட்பட 251 பேரை பிணைக்...
காசாவை ‘கைப்பற்றும்’ ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி கடும் எதிர்ப்பு
admin - 0
காசா பகுதியை கைப்பற்றி, அமெரிக்கா அதை சொந்தமாக்கிக் கொள்ளும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பதில் அளித்துள்ள சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சகம், "பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் நிராகரிக்கிறோம். பாலஸ்தீன அரசை நிறுவாமல் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்த மாட்டோம். பாலஸ்தீன அரசு...
சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக 205 இந்தியர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா
admin - 0
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அந்த நாட்டு அரசு நேற்று ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பியது. இந்த விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது.
அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த சுமார் 8 லட்சம் பேர் அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதம் 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப்,...
ஸ்வீடனில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்வீடனில், ஸ்டாக்ஹோமில் இருந்து சுமார் 200 கி.மீ தொலையில் உள்ள ஓரேப்ரோ என்னும் இடத்தில் ரிஸ்பெர்க்ஸ்கா ஸ்கூல் என்ற கல்வி நிறுவனம் உள்ளது. பள்ளிக் கல்வியை முறையாக முடிக்காத மாணவர்களை உயர்கல்விக்கு தயார்படுத்துகிறது இப்பள்ளி.
இந்த பள்ளியில் செவ்வாய்க்கிழமை நுழைந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும்...










