கருங்கல்: பைக்குகள் மோதல்; ராணுவ வீரர் உயிரிழப்பு

0
417

கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் செந்தமிழ் பாண்டியன் (58). முன்னாள் ராணுவ வீரர். இவர் குளச்சலில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் வெள்ளியாவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த மற்றொரு பைக் இவரது பைக்கில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சேவியர் செந்தமிழ் பாண்டியனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதுபோன்று மோதிய பைக்கில் வந்த குடும்பத்தினருக்கும் காயமும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சேவியர் செந்தமிழ் பாண்டியனை நாகர்கோவில் உள்ள மருத்துவமனையிலும், மற்றவர்களை கருங்கலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். இதில் சேவியர் செந்தமிழ் பாண்டியன் சிகிச்சைப் பலனின்றி நேற்று (10-ம் தேதி) மாலை உயிரிழந்தார். கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here