வேங்கோடு அருகே முண்டபிலா விளை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(44). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது உறவினர்கள் கிங்ஸ்லி (28), ரொபின்சன் (30), வில்சன் (32), ஷாஜி (35) ஆகியோருக்குமிடையே காம்பவுண்ட் சுவர் கட்டுவது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவ தினம் ரமேஷை 4 பேரும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் சகோதரர்களான கிங்ஸ்லி, ரொபின்சன், வில்சன், ஷாஜி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.