கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கலந்து கொண்டு தலைமை ஆசிரியர்கள் மாணவர்களை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தினார்.