ஹார்முஸ் ஜலசந்தி​யில் எல்பிஜி கப்பல் மீது தாக்குதல்: 2 இந்திய மாலுமிகள் காயம்; ஒரு​வர் மாயம்

0
15

ஹார்முஸ் ஜலசந்தி​யில் 24 இந்திய மாலுமிகளு​டன் சென்ற எல்பிஜி கப்பல் மீது நடத்​தப்​பட்ட ஏவு​கணைத் தாக்​குதலில் 2 மாலுமிகள் காயமடைந்​தனர். மேலும், ஒரு மாலுமி மாயமாகியுள்​ளார்.

இதுகுறித்​து, மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் வெளி​யிட்ட செய்திக் குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: நேற்​று​முன்​தினம் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் பனாமா நாட்​டுக் கொடி​யுடன் பயணித்த ‘எம்டிதாரா கேஸ்’ என்ற எல்​பிஜி கப்​பல் மீது ஏவு​கணை தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதில், 2 இந்​திய மாலுமிகள் காயமடைந்​தனர். அவர்​கள் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர்.

மேலும், ஒரு இந்​திய மாலுமி மாய​மாகி​யுள்​ளார். கப்​பலில் இருந்த 21 மாலுமிகள் பத்​திர​மாக மீட்​கப்​பட்டு கசாப் கடற்​கரைப் பகுதிக்குக் கொண்டு செல்​லப்​பட்​டுள்​ளனர்.

ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம், அந்​நாட்டு அதி​காரி​களு​டன் இணைந்து மாயமான மாலுமியை தேடும் மீட்​புப் பணி​களை தொடர்ந்து கண்காணித்து வரு​கிறது. மீட்​புப் பணி​களில் உரிய நேரத்​தில் உதவி​களை​யும், ஆதர​வை​யும் வழங்​கிய ஓமன் அரசுக்கு நன்றியைத் தெரி​வித்​துக் கொள்​கிறோம்.

அந்​தப் பிராந்​தி​யத்​தில் கப்​பல்​கள் தொடர்ந்து தாக்​கப்​படு​வது கவலை அளிக்​கிறது. இது சர்​வ​தேச கடல் வழிகளில் பயணிக்​கும் பொது​மக்​கள் மற்​றும் மாலுமிகளின் பாது​காப்​புக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தலாக உள்​ளது. வணி​கக் கப்​பல்​கள் மற்​றும் பொது​மக்கள் பயன்​பாட்டு உள்​கட்​டமைப்​பு​கள் மீதான தாக்​குதல்​கள் உடனடி​யாக நிறுத்​தப்பட வேண்​டும். சர்​வ​தேச சட்​டங்​களுக்கு இணங்க, சர்​வ​தேச கடல் வழிகளில் தடையற்ற கப்​பல் போக்​கு​வரத்​தும் வர்த்​தக​மும் விரை​வில் மீட்​டெடுக்​கப்பட வேண்​டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here