ஆசியான் உச்சிமாட்டின் இடையே குவாட் தலைவர்கள் சந்திப்பு: மோடி, ட்ரம்ப் பங்கேற்பு

0
12

ஆசியான் உச்சிமாநாட்டின் இடையே நடைபெற உள்ள குவாட் தலைவர்கள் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 49வது ஆசியான் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் நடைபெறும் 23வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் கிழக்காசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

இதற்காக புதுடெல்லியில் இருந்து நேற்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடி மணிலாவுக்குப் புறபட்டுச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காலை மணிலாவில் உள்ள நூற்றாண்டு பழமையான குருத்வாராவுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு நடைபெற்ற வழிபாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, குருத்வாராவை மறுசீரமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு தலைமை தாங்கினார்.

பிரதமர் மோடியின் இன்றைய சந்திப்புகள் குறித்து தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சர் ரந்திர் ஜெய்ஸ்வால், “பிரதமர் மோடி, மணிலாவில் உள்ள கல்சா திவான் குருத்வாராவுக்குச் சென்றார். இந்த குருத்வாரா, இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையிலான துடிப்பான கலாச்சார மற்றும் மக்கள் இடையிலான உறவுகளுக்கு ஒரு சான்றாக ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நிலைத்திருக்கிறது. 1901ல் ஆரம்பிக்கப்பட்டு 1903ல் முறைப்படி செயல்படத் தொடங்கிய இந்த குருத்வாராவை, 5 மில்லியன் டாலர் செலவில் மறுசீரமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, இந்தியா – ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். மேலும், கிழக்காசிய உச்சிமமாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார். இம்மாநாடுகளில், இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையேயான வலிமையான பிணைப்பு குறித்து அவர் உரை நிகழ்த்த உள்ளார்.

மேலும், இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை குறித்தும் அவர் விளக்க உள்ளார். மேலும், பல்வேறு இருதரப்பு சந்திப்புகளையும் பிரதமர் மேற்கொள்ள உள்ளார். மேலும், குவாட் தலைவர்களின் சந்திப்பும் இன்று நடைபெற உள்ளது. இதிலும், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.” என தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பு குவாட். சீனா சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பின்னர் மணிலாவுக்கு வர உள்ளார். அவரது வருகைக்குப் பிறகு நான்கு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு நிகழ உள்ளது. டொனால்டு ட்ரம்ப், இரண்டாவது முறையாக அதிபர் ஆன பிறகு நடைபெற உள்ள முதல் குவாட் தலைவர்கள் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here