சீனாவின் மின் விமான சோதனை வெற்றி

0
15

சீனாவில் முதல்​முறை​யாக மனிதர்​களால் இயக்கப்பட்ட மின்சார விமான பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது.

சீனாவின் வணிக விமானக் கழகம்(சிஓஎம்​ஏசி), சீனா ஏவுவாகன தொழில்​நுட்​பக் கழகம், ஷாங்​காய் ஜியாடோங் பல்​கலைக்​கழகம் ஆகிய​வற்​றின் கூட்டு முயற்​சி​யில் மின்​சார விமானம் தயாரிக்கப்பட்​டுள்​ளது. சிஇ-25ஏ என்ற இந்த விமானம், உள்​நாட்டு தொழில்​நுட்​பத்​தில் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. இது முதல் முறை​யாக கடந்த பிப்​ரவரி 2-ம் தேதி ஆளில்​லாமல் பறக்​கவைக்​கப்​பட்டு சோதனை நடத்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில், கிழக்கு சீனாவின் ஷான்​டாங் மாகாணத்​தில் சனிக்கிழமை அன்று இந்த விமானம் மனிதர்​கள் மூலம் இயக்கப்பட்டு வெற்​றிகர​மாக சோதனை செய்து பார்க்​கப்​பட்​டது. சோதனையின்​போது விமானத்​தில் 2 விமானிகள், ஒரு விமான சோதனைப் பொறி​யாளர் என 3 பேர் இருந்​தனர். சோதனை​யின்​போது அனைத்து செயல்​பாட்டு அளவு​கோல்​களும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்​த​தாகத் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த சோதனை 57 நிமிடங்​கள் 46 விநாடிகள் நீடித்​தன. அப்​போது விமானம் 16 நிமிடங்​களுக்​கும் மேலாக பறந்து 60.4 கி.மீ. தூரத்தைக் கடந்​தது. நகரங்​களுக்கு இடையே யான போக்​குவரத்துக்காக வடிவ​மைக்​கப்​பட்​டுள்ள இந்த விமானத்தில் 19 பயணிகள் செல்ல முடியும். இதன் அதி​கபட்ச டேக்-ஆஃப் எடை 10 டன்​. இது மணிக்கு 300 கி.மீ. வரையி​லான பறக்​கும் வேகத்தையும், ஒற்றை சார்​ஜில் 400 கி.மீ. தூர வரம்​பையும் கொண்​டுள்​ளது.

சீனாவின் விமானப் போக்​கு​வரத்து அதி​காரி​களும் இந்த விமானத்தின் வடிவ​மைப்பை ஏற்றுள்ளதன் மூலம் அதன் வணிக ரீதி​யான அடுத்த படிக்கு நகர்ந்துள்ளது. இதன்​மூலம் மின்​சார விமானத்துறை​ வளர்ச்​சி​யில் சீனா முக்​கிய​மான மைல்​கல்லை எட்டியுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here