“நாங்கள் இன்னும் திருமண உறவில்தான் இருக்கிறோம்” – ரம்யா கிருஷ்ணன் விளக்கம்

0
14

“வேலை காரணமாக நானும், எனது கணவரும் இருவேறு நகரங்களில் வசிக்கிறோம்” என நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “எனக்கு நாடகங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது நான் ஹைதராபாத்தில் வசித்து வந்தேன். அதனால் சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் வந்து போய்க்கொண்டு இருந்தேன். அப்படி நான் சென்று திரும்பும்போது எல்லாம் என் மகனுக்கு உடல்நலம் சரி இல்லாமல் போய்க்கொண்டிருந்தது.

இதனால் நானும் எனது கணவரும் சேர்ந்து ஒரு முடிவெடுத்து மகனை சென்னையில் ஒரு பள்ளியில் சேர்த்து நான் அங்கேயே தங்கிவிட்டேன். நாங்கள் இன்னும் திருமண உறவில்தான் இருக்கிறோம். இது 100 சதவீதம் எங்கள் வேலை சார்ந்து எடுக்கப்பட்ட முடிவு. நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் இரு வேறு நகரங்களில் வசித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்த அவர், “நடைமுறை சாத்தியங்களுக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவு இப்போது எங்கள் இருவருக்கும் வசதியாக மாறி இருக்கிறது. அருகில் இருந்து சண்டை போடுவதற்கு பதிலாக, நாங்கள் இப்போது நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எங்கள் திருமணத்துக்கு முன்பு வம்சி என்னிடம் ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும், லிவிங்கில் இருக்கலாம் எனக் கூறினார். அப்போதே நான் அதற்கு சரி சொல்லி இருக்க வேண்டும்” என வேடிக்கையாக ரம்யா கிருஷ்ணன் தெரிவித்தார்.

நடிகை ரம்யா கிருஷ்ணனும், தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியும் 2003-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். முன்னதாக ‘சந்திரலேகா’ என்கிற தெலுங்கு படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி இருந்தனர். வம்சி இயக்கி இருந்த இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ராம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.  ‘படையப்பா’வில் நடித்த நீலாம்பரி, பாகுபலியில் நடித்த சிவகாமி கதாபாத்திரங்கள் இவரின் திரை ஆளுமைக்கான சில உதாரணங்கள். தற்போதைய தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ரம்யா கிருஷ்ணன், கடைசியாக ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்திருந்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here