​வாஷிங்டன் மீது அணுக்கழிவு தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்: அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை

0
9

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் மீது அணுக்கழிவு குண்டு தாக்குதல் அல்லது ரசாயன தாக்​குதலை நடத்த ஈரான் ராணுவம் சதித் திட்​டம் தீட்​டி​யிருப்​ப​தாக அமெரிக்க உளவுத் துறை எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. கடந்த பிப்​ர​வரி மாதம் முதல் அமெரிக்​கா, ஈரான் இடையே போர் நீடித்து வரு​கிறது.

ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள ஈரானின் கெஷ்ம் தீவு மீது அமெரிக்க ராணுவம் அண்​மை​யில் வான்​வழி தாக்​குதல் நடத்தியது. அப்​போது ஈரானின் ரேடார்​கள், ஏவு​கணை தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. இதற்​குப் பதிலடி​யாக வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது ஈரான் ராணுவம் ஏவுகணை​கள், ட்ரோன்​கள் மூலம் தொடர் தாக்​குதல்​களை நடத்தி வரு​கிறது.

இந்த சூழலில் அமெரிக்க உளவுத் துறை, அதிபர் ட்ரம்ப் நிர்​வாகத்​திடம் விரி​வான அறிக்​கையை தாக்​கல் செய்​திருக்​கிறது. அதில், “அமெரிக்க தலைநகர் வாஷிங்​டன் மற்​றும் மூத்த அமைச்​சர்​கள், அதி​காரி​கள் மீது அணுக்கழிவு குண்டு தாக்குதல் அல்லது ரசாயன தாக்​குதலை நடத்த ஈரான் ராணுவம் சதித் திட்​டம் தீட்​டி​யிருக்​கிறது” என்று எச்​சரிக்கை விடுக்​கப்​பட்டு உள்​ளது.

ஈரான் நாட்​டில் வழக்​க​மான வெடிமருந்​துடன் அணுக் கழி​வு​களை சேர்த்து சக்​தி​வாய்ந்த வெடிகுண்​டு​கள் தயாரிக்​கப்​பட்டு வருவதாகக் கூறப்​படு​கிறது. இது அழுக்கு குண்டு என்று அழைக்கப்​படு​கிறது. இந்த வெடிகுண்​டு​களால் அணு குண்டு தாக்​குதல் போன்ற பாதிப்​பு​களை ஏற்​படுத்த முடி​யாது. எனினும் அழுக்கு குண்டு வெடித்​துச் சிதறும் பகு​தி​யில் கதிர்​வீச்சு அபா​யம் ஏற்படும்.

ஈரான் ராணுவத்​தின் உளவாளி​கள் அமெரிக்​கா​வில் வசிக்​கும் சில சமூக விரோ​தி​களைப் பயன்​படுத்தி அழுக்கு குண்​டு​களை அமெரிக்கா​வுக்​குள் கடத்​தி​யிருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இவை ரகசிய இடத்​தில் பதுக்கி வைக்​கப்​பட்டு இருப்​ப​தாக​வும் அவற்​றின் மூலம் திடீர் தாக்​குதல் நடத்த திட்​ட​மிட்டு இருப்​ப​தாக​வும் தகவல்கள் வெளி​யாகி உள்​ளன. இதைத் தொடர்ந்து தலைநகர் வாஷிங்​டனில் பாது​காப்பு அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது.

முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக அமெரிக்க வெளி​யுறவு அமைச்​சர் மார்கோ ரூபியோ, பாது​காப்​பு அமைச்​சர் பீட் ஹெக்​செத், நிதி​யமைச்​சர் ஸ்காட் பெசென்ட் உள்​ளிட்​டோர் பாதுகாப்பான ராணுவ தளங்​களுக்கு இடம் பெயர்ந்து உள்​ளனர். அமெரிக்க மூத்த அதி​காரி​கள், வெள்ளை மாளி​கை​யின் மூத்த அதி​காரி​களும்​ ராணுவ தளங்​களின்​ குடி​யிருப்​பு​களுக்கு மாறியுள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here