மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டு 20 ஆண்டுக்குப் பின் கேரளா திரும்பிய அப்துல் ரஹீமுக்கு வரவேற்பு

0
24

மரண தண்​டனையில் காப்பாற்றப்பட்டு 20 ஆண்டு​ சிறை​யில் இருந்த அப்​துல் ரஹீம் நேற்று கேரளா​ திரும்பினார்.

கேரளாவைச் சேர்ந்த அப்​துல் ரஹீம் சவுதி அரேபியாவில் அப்துல்லா என்பவரின் வீட்டில் 2006-ல் கார் ஓட்​டுநராகப் பணியாற்றினார். அப்​துல்​லா​வின் மகன் ஒரு மாற்​றுத்​திற​னாளி. அந்த சிறு​வனை​யும் பராமரிக்​கும் பொறுப்பு ரஹீமிடம் ஒப்படைக்கப்​பட்​டது. ஒரு​நாள் சிறு​வனை காரில் ரஹீம் அழைத்துச் சென்​ற​போது சிறு​வனின் கழுத்தில் இணைக்கப்பட்டிருந்த செயற்கை சுவாசக் ​குழாய் மீது ரஹீமின்கை தவறு​தலாகப் பட்​ட​தில் மரணமடைந்​தான்.

சிறு​வனின் பெற்​றோர் தொடுத்த வழக்​கில் ரஹீ​முக்கு மரண தண்டனை விதிக்கப்​பட்​டது. இது கொலை அல்ல விபத்து என்று ரஹீம் சார்​பாக பல்​வேறு அமைப்​பு​கள் வாதிட்​டன. இறு​தி​யில் நஷ்ட ஈடாக இந்​திய மதிப்​பில் ரூ.34 கோடி `குரு​திப் பணம்’ அளிக்கும்​பட்​சத்​தில் ரஹீ​முக்கு மன்​னிப்பு அளிக்க பாதிக்​கப்​பட்ட பெற்​றோர் தரப்பு முன்​வந்​தது.

இதையடுத்து சவு​தி​யில் 18 ஆண்​டு​களாக சிறை​யில் சிக்கி தவித்து மரணத்​தின் விளிம்​பில் இருக்​கும் ரஹீமை காப்​பாற்ற ஒட்டுமொத்த கேரள மக்​களும் ஒன்று திரண்​டனர். கடந்த 2018-ம் ஆண்​டில் இருந்து முயற்சி செய்து ரூ.34.4 கோடி நிதி திரட்டப்பட்டது.

இதையடுத்து சிறு​வனின் பெற்​றோருக்கு ரூ.34 கோடி குரு​திப்​பணம் வழங்​கப்​பட்​டது. பணம் தரப்​பட்டு 2 ஆண்​டு​கள் ஆன நிலை​யில் பொது​ மன்​னிப்பு மூலம் 20 ஆண்​டு​களுக்​குப் பின்​னர் விடு​தலை​யான அப்​துல் ரஹீம் நேற்று கேரளா​வுக்கு வந்​தார். கோழிக்​கோட்​டிலுள்ள கரிப்​பூர் விமான​நிலை​யத்​தில் வந்திறங்கிய அவரை குடும்​பத்​தா​ரும், உறவினர், நண்​பர்​களும் உற்சாகத்துடன் வரவேற்​றனர். ரஹீமைப் பார்த்​ததும் குடும்பத்தார் கதறி அழுதனர்.

அப்​போது அப்​துல் ரஹீம் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “எனக்​காக உதவிய அனை​வருக்​கும் எனது மனமார்ந்த நன்​றி. எனக்​காக ரூ.34 கோடி திரட்டி உதவிய கேரள மக்​களுக்கு என்றென்​றும் கடமைப்​ பட்​டுள்​ளேன். அவர்​களை மறக்​கவே மாட்டேன்” என்று கண்​ணீர் மல்க தெரி​வித்​தார். பின்​னர் தன்னை வரவேற்​கத் திரண்​டிருந்த மக்​களைப் பார்த்து கையசைத்​து​விட்​டு அவர்​தனது கிராமத்​துக்​கு புறப்​பட்​டார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here