டிஜிட்டல் கைது மோசடி கும்பலிடம் சிக்கி ரூ.4 கோடியை இழந்த இந்தியர்

0
23

அமெரிக்கா​வில் வழக்​கறிஞ​ராக பணி​யாற்றி ஓய்​வு​பெற்ற இந்தியர் ஒரு​வர் டிஜிட்டல் கைது மோசடி கும்​பலிடம் ரூ.4 கோடியை இழந்​துள்​ளார்.

டெல்​லியைச் சேர்ந்த அதுல் தல்​வார், அமெரிக்​கா​வின் நியூயார்க்கில் வழக்​கறிஞ​ராகப் பணிபுரிந்து ஓய்​வு​பெற்​றவர். அங்கிருந்து தாயகம் திரும்​பிய அவர், குரு​கி​ராமில் தனது சகோதரருடன் தங்​கி​யிருந்​தார். அக்​டோபர் 17 அன்று மும்பை கொலாபா காவல் நிலைய அதி​காரி என அறி​முகப்​படுத்​திக் கொண்​டு பேசிய நபர் அதுல் தல்வாரிடம் ‘பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதல் வழக்​கில் உங்​களுக்கு தொடர்பு இருப்​பது தெரியவந்துள்​ளது’ என்று கூறி​யுள்​ளார்.

உங்​கள் அடை​யாள அட்டை விவரங்​களைப் பயன்​படுத்தி தொடங்கப்​பட்ட கனரா வங்​கிக் கணக்கு மூலம் ரூ.53 கோடி மாற்றப்​பட்​டுள்​ளது, இதன்மூலம் ரூ.5 கோடி கமிஷன் பெற்றிருக்கிறீர்​கள் என்​றும் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். தல்​வார் இதை மறுத்​த​போது, தொலைபேசி​யில் இருந்த மற்​றொரு​வர் அவரைக் கைது செய்​யப் போவ​தாக மிரட்​டி​உள்​ளார்.

தொடர்ந்​து, சிபிஐ உதவி இயக்​குநர் என்ற பெயரில் ஒரு ரகசிய கடிதத்தை வாட்​ஸ்​அப் மூலம் அவருக்கு அனுப்​பி​யுள்​ளனர். பின்னர், அவரது நடமாட்​டத்​தைக் கட்​டுப்​படுத்தி உள்​ளனர். மேலும் தல்​வாரின் வங்​கிக் கணக்கு விவரங்​களைப் பெற்​று அவர் வைத்​திருந்த சுமார் 3,80,000 டாலரை பணமாக மாற்றி தாங்​கள் கூறும் வங்​கிக் கணக்​குக்கு அனுப்​பு​மாறு அறி​வுறுத்​தி​யுள்​ளனர். விசா​ரணை முடிந்​ததும் பணம் திருப்​பித் தரப்​படும் என்று மோசடியாளர்​கள் அவருக்கு உறு​தி​யளித்​துள்​ளனர்.

இதன் ஒரு பகு​தி​யாக, வரி செலுத்​துதல் என்ற பெயரில் சுமார் ரூ.1.5 கோடி​யும், எத்​தேரி​யம் கிரிப்​டோகரன்சி வடி​வில் கிட்​டத்​தட்ட ரூ.2.5 கோடி​யும் மாற்​றப்​பட்​டுள்​ளன. நவம்​பர் 7-க்​குள், பாதிக்​கப்​பட்​ட​வர் கிட்​டத்​தட்ட ரூ.4 கோடியை இழந்​திருந்​தார். நவம்​பர் 7-ம் தேதிக்​குள் பணம் திரும்​பக் கிடைக்​காத​தால், தல்​வாருக்கு சந்​தேகம் எழுந்​தது. அதன்​பிறகு எதிர்​தரப்​பினர் அவருடன் தொடர்​பு​கொள்​வதை நிறுத்​தினர்.

இதையடுத்​து, தல்வார் கவுதம் புத் நகரில் உள்ள சைபர் குற்​றக் காவல் நிலையத்தில் புகார் அளித்​தார். இதன் அடிப்​படை​யில் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. நியூ​யார்க் சென்று், அமெரிக்காவின் புலனாய்வு அமைப்​பிட​மும்​ (எப்​பிஐ) புகார்​ அளித்​துள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here