பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

0
48
பள்ளியாடியில் சாலையைக் கடக்க முயன்ற 72 வயது தொழிலாளி மீது இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழப்பு.
பள்ளியாடி நெசவாளர் காலனியைச் சேர்ந்த 72 வயது தொழிலாளி வின்சென்ட், சாலையைக் கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார். விபத்து குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளியாடி பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பள்ளியாடி, நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் வின்சென்ட் (72). தொழிலாளி. இவா் புதன்கிழமை கடைக்குச் செல்வதற்காக சாலையைக் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து, அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here