வெள்ளை மாளிகை ஊடக தடையை நீக்கிய நீதிமன்றம்

0
23

சிஎன்​என், எம்​எஸ் நவ் மற்​றும் பொலிட்​டிகோ ஆகிய மூன்று ஊடக நிறு​வனங்​களின் செய்​தி​யாளர் அனு​மதி அட்டைகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செப்​டம்​பர் 18-ம் தேதி ரத்து செய்​திருந்​தார். இதற்கு எதி​ராக 3 நிறு​வனங்​களும் கடந்த திங்​கட்​கிழமை வாஷிங்​டன் டி.சி.​யில் உள்ள கூட்​டாட்சி மாவட்ட நீதி​மன்றத்தில் வழக்​குத் தொடர்ந்​திருந்​தன.

தமது நிர்​வாகத்தை பற்​றிய இம்​மூன்று ஊடகங்​களின் செய்​தி​கள் “பொய்​யானவை, எதிர்​மறை​யானவை” என்று சமூக ஊடகத்​தில் தெரி​வித்​திருந்த ட்ரம்ப், அதனடிப்​படை​யில் இத்​தடையை விதித்திருந்​தார். ஆனால் நீதி​மன்​றத்​தில், தேசிய பாது​காப்பு காரணங்​களுக்​காகவே இத்​தடை விதிக்​கப்​பட்​ட​ தாக நீதித்​துறை அமைச்சக வழக்​கறிஞர்​கள் வாதிட்​டனர்.

இந்நிலையில், அரசு தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதி டிம் கெல்லி, 3 ஊடக நிறுவனங்களின் வெள்ளை மாளிகை தடைக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், அனு​மதி அட்​டைகள் ரத்து செய்​யப்​படு​வதற்கு முன்​னர் முறையான அறி​விப்​போ, விளக்கமளிக்க வாய்ப்போ வழங்​கப்​பட​வில்லை எனச் சுட்டிக்காட்டி​னார். தேசிய பாது​காப்பு குறித்த அரசின் வாதத்​தில் ஆதா​ரங்​கள் எது​வும் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்​தி​னார். நீதிபதி டிம் கெல்​லியை ட்ரம்ப் தான் தனது முதல் பதவிக்காலத்தில் 2017-ல் நீதிப​தி​யாக நியமித்​திருந்​தார்.

மூன்று ஊடக நிறு​வனங்​களின் அனு​மதி அட்​டைகளை​யும் உடனடி​யாக மீண்​டும் வழங்​கு​மாறு நீதிபதி உத்​தர​விட்​டார். வழக்கு தொடர்ந்து நடை​பெறும் வரை, 14 நாட்​களுக்கு இந்​தத் தடை உத்​தரவு அமலில் இருக்​கும். ராய்ட்​டர்​ஸ், வாஷிங்​டன் போஸ்ட், ஃபாக்ஸ் நியூஸ் உள்​ளிட்ட பல ஊடக நிறு​வனங்​களும் இதற்கு ஆதரவு தெரி​வித்​தன. நவம்​பர் 3-ம் தேதி நடை​பெறவுள்ள இடைத்​தேர்​தலுக்கு சில வாரங்​களுக்கு முன்​னர் இந்த வழக்கு நடை​பெறுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here