இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: 15 பேர் கொண்ட ஜப்பான் அணி அறிவிப்பு

0
22

இந்​தியா மற்​றும் ஜப்பான் நாடு​களுக்கு இடையே​யான தூதரக உறவின் 75-வது ஆண்டு நிறைவைக் கொண்​டாடும் விதமாக இந்​தியா – ஜப்​பான் கிரிக்​கெட் அணி​கள் இடையே சர்வதேச டி20 போட்டி நடத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த போட்டி வரும் 22-ம் தேதி தோச்​சிஜி மாகாணத்​தில் உள்ள சானோ சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில் நடை​பெறுகிறது. இந்த போட்​டிக்​கான ஜப்​பான் அணியை அந்​நாட்டு கிரிக்​கெட் வாரி​யம் அறி​வித்​துள்​ளது.

ஆசிய விளை​யாட்​டில் கலந்​து​கொள்​ளும் அதே அணியே இந்​தியாவுக்கு எதி​ரான ஆட்​டத்​தி​லும் பங்​கேற்​கும் என தெரிவிக்கப்பட்​டுள்ளது.

ஜப்​பான் கிரிக்​கெட் அணி, ஐசிசி முழுநேர உறுப்​பினர் அந்​தஸ்து பெற்ற அணிக்கு எதி​ராக சர்​வதேச டி 20 போட்​டி​யில் விளை​யாட உள்​ளது இதுவே முதன்​முறையாகும். ஐசிசி தரவரிசை​யில் டி 20 உலக சாம்​பிய​னான இந்திய அணி முதலிடத்​தி​லும், ஜப்​பான் 41-வது இடத்​தி​லும் உள்ளன.

ஜப்​பான் அணி​யில் அதிக ரன்​கள் சேர்த்​துள்ள 30 வயதாகும் கென்டல் கடோ​வாக்கி ஃபிளெமிங் கேப்​ட​னாக நியமிக்கப்பட்டுள்ளார். கென்​டல் கடோ​வாக்கி ஃபிளெமிங் 55 சர்வ​தேச டி 20 போட்​டிகளில் விளை​யாடி 1,871 ரன்​கள் சேர்த்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 139.41 ஆகும். 2 சதங்​களும், 12 அரை சதங்​களும் அடித்​துள்​ளார்.

கென்​டல் கடோ​வாக்கி ஃபிளெமிங்​குடன் 50-க்​கும் மேற்​பட்ட டி 20 போட்​டிகளில் விளை​யாடிய அனுபவம் கொண்ட இப்​ராஹிம் தகாஹாஷி, டெக்​லான் சுஸுகி மெக்​கோம்ப் ஆகியோ​ரும் அணியில் இடம் பெற்​றுள்​ளனர். 15 பேர் கொண்ட அணி​யில் விக்கெட் கீப்​ப​ராக வட்​டாரு மியாவ்ச்சி உள்​ளார். லெக் ஸ்பின்னராக மகோடோ தனி​யாமா இடம் பெற்​றுள்​ளார். ஜப்​பான் அணிக்​காக இவர், அதிக விக்​கெட்​களை வீழ்த்தி உள்​ளார்.

ஜப்​பான் அணி விவரம்:

கென்​டல் கடோ​வாக்கி ஃபிளெமிங் (கேப்டன்), சார்லி ஹரா ஹின்​ஸ், பெஞ்​சமின் இடோ டேவிஸ், அலெஸ்டர் கடோ​வாக்கி ஃபிளெமிங், கோஹெய் குபோ​டா, ஜேக் குசுடா நாயர்ன், வட்​டாரு மியாவ்ச்​சி, ரியோ சகு​ரானோ தாமஸ், அலெக்ஸ் ஷிராய் பட்​மோர், ஷோமா சுகாயா ஸ்லேட்​டர், டெக்​லான் சுஸுகி மெக்​கோம்ப், சுயோஷி தகடா, இப்​ராஹிம் தகாஹாஷி, மகோடோ தனி​யா​மா, லச்​லான்​ யமமோட்​டோ லேக்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here