குமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஸ்டாயின் தலைமையில், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் போக்சோ விழிப்புணர்வு போஸ்டர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், இளம் தலைமுறையினர் பாலியல் குற்றங்களில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.















