நட்டாலம் பகுதியைச் சேர்ந்த வங்கியாளர் சுபாஷ் (37) தனது நிலத்தை பார்வையிடச் சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சுவாமிதாஸ் (57), பிரேமலதா (52), மணிகண்டன் (65), புஷ்பம் (55) ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி, ரூ. 15,000 மதிப்பிலான இரும்பு வேலியை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் 2 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.















