நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக தமிழ் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வேட்பாளர் எம். ஆர். காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் அதிக வாக்குகள் பெற்றுத் தரும் நிர்வாகிக்கு ஒரு பவுன் மோதிரம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.














