கேரளாவில் ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், தமிழக-கேரள எல்லையில் உள்ள பத்மநாபபுரம் கோட்டத்திற்குட்பட்ட அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபானக்கூடங்கள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மனமகிழ் மன்றங்களுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் ஏப்ரல் 7, 2026 காலை 10 மணி முதல் ஏப்ரல் 9, 2026 நள்ளிரவு 12 மணி வரை செயல்படாது.














