மோனங்க், சஞ்சய் அதிரடியில் அமெரிக்காவுக்கு 2-வது வெற்றி: 31 ரன்களில் நமீபியாவை வீழ்த்தியது – T20 WC 2026

0
21

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் ‘ஏ’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் அமெரிக்கா – நமீபியா அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த அமெரிக்க அணி 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 199 ரன்​கள் குவித்​தது. டி20 உலகக் கோப்பை தொடரில் அந்த அணி​யின் அதி​கபட்ச ரன் குவிப்​பாக இது அமைந்​தது. இதற்கு முன்​னர் அந்த அணி கடந்த 2024-ம் ஆண்டு தொடரில் கனடாவுக்கு எதி​ராக 197 ரன்​கள் சேர்த்​திருந்​தது.

நமீபி​யா​வுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் தொடக்க வீரரும் கேப்​ட​னு​மான மோனங்க் படேல் 30 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 52 ரன்​கள் விளாசி​னார். இது அவரது 7-வது அரை சதமாக அமைந்​தது. இறு​திக்​கட்ட ஓவர்​களில் மட்​டையை சுழற்றி தனது முதல் அரை சதத்தை கடந்த சஞ்​சய் கிருஷ்ண​மூர்த்தி 33 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 68 ரன்​கள் விளாசி​னார். அவருக்கு உறு​துணை​யாக விளை​யாடிய மிலிந்த் குமார் 20 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 28 ரன்​கள் சேர்த்​தார். இந்த ஜோடி 4-வது விக்​கெட்​டுக்கு 87 ரன்​கள் குவித்​தது. முன்​ன​தாக சஹாயன் ஜகாங்​கிர் 22, சாய்​தேஜா முக்​கமல்லா 17 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர்.

அமெரிக்க அணி முதல் 6 ஓவர்​களில் விக்​கெட் இழப்​பின்றி 65 ரன்​களை​யும், கடைசி 6 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழந்து 83 ரன்​களை​யும் வேட்​டை​யாடியது. இடைப்​பட்ட 8 ஓவர்​களில் அமெரிக்க அணி 3 விக்​கெட்​களை இழந்து 51 ரன்​களை எடுத்​திருந்​தது. இந்த காலக்​கட்​டத்​தில் அமெரிக்க அணி​யின் ரன்​கு​விப்பை சுழற்​பந்து வீச்​சாளர்​களான வில்​லெம் மைபர்க், ஜெரார்டு எராஸ்​மஸ் ஆகியோர் கட்​டுப்​படுத்​தினர். இவர்​கள் இரு​வரும் தலா 2 விக்​கெட்​கைளை கைப்​பற்​றினர்.

200 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த நமீபியா அணிக்கு லோரன் ஸ்டீன்​காம்ப் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். இதனால் அந்த அணி 10.5 ஓவர்​களில் 100 ரன்​கள் குவித்​தது. லோரன் ஸ்டீன்​காம்​புக்கு உறு​துணை​யாக விளை​யாடிய ஜேன் ஃபிரைலிங்க் 19, ஜான் நிக்​கோல் லோஃப்​டி-ஈடன் 28 ரன்​களில் வெளி​யேறினர். மட்​டையை சுழற்​றிய லோரன் ஸ்டீன்​காம்ப் 30 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 58 ரன்​கள் விளாசிய நிலை​யில் ஷுபம் ரஞ்​சனே பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

இதன் பின்​னர் நமீபியா ஆட்​டம் கண்​டது. ஜெரார்டு எராஸ்​மஸ் 6, ஜேஜே ஸ்மித் 31, ஸான் கிரீன் 18 ரன்​களில் நடையை கட்​டினர். 20 ஓவர்​களின் முடி​வில் நமீபியா அணி 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 168 ரன்​களே எடுத்​தது. ரூபன் டிரம்​பல்​மேன் 3, டைலன் லெய்​சர் ரன் ஏதும் எடுக்​காமல் களத்​தில் இருந்​தனர். அமெரிக்க அணி சார்​பில் ஷாட்லி வான் ஷால்க்விக் 2 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

31 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி 4 ஆட்​டங்​களில் 2 தோல்​வி, 2 வெற்​றி​யுடன் 4 புள்​ளி​களு​டன் லீக் சுற்றை 3-வது இடத்​துடன் நிறைவு செய்​துள்​ளது. அமெரிக்​கா​வின் நிகர ரன் விகிதம் 0.788 ஆக உள்​ளது. தற்​போதைய வெற்​றி​யின் மூலம் அமெரிக்க அணி சூப்​பர் 8 சுற்​றுக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்​பில் நீடிக்​கிறது. ‘ஏ’ பிரி​வில் மற்ற அணி​களின் முடிவு​களை பொறுத்த அமெரிக்க அணி​யின் அடுத்த சுற்று வாய்ப்பு தெரிய வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here