கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் வடசேரி பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தொழிலாளியான துரைராஜ் (வயது 37) என்பவரை கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல நேசமணிநகரை சேர்ந்த அனிஷ் (19) மற்றும் ஆசாரிபள்ளம் இந்திரா நகரை சேர்ந்த சிவா சூரியா (19) ஆகியோரிடமிருந்த 50 கிராம் கஞ்சாவை ஆசாரிபள்ளம் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.