Home 2024
Yearly Archives: 2024
அரசு பள்ளிகளில் இணைய வசதிக்கான சேவை கட்டணம்: பள்ளி கல்வி துறை ரூ.3.26 கோடி நிதி விடுவிப்பு
அரசுப் பள்ளிகளில் இணையதள வசதிக்கான சேவைக் கட்டணத்தை செலுத்தும் வகையில் ரூ.3.26 கோடி நிதியை பள்ளிக்கல்வித் துறை விடுவித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ள பிராட்பேண்ட் சேவைக் கட்டணத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.1.50 கோடி நிலுவை வரை நிலுவை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையாகின.
இந்நிலையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் 2,973 உயர்நிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூ.1,500 வீதம் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கு ரூ.44 லட்சத்து 59,500-ம்,...
“பெண்களுக்கு அண்ணனாக, அரணாக இருப்பேன்” – தவெக தலைவர் விஜய் கடிதம்
“எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்போன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம்.” என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கைப்பட எழுதி வெளியிட்டுள்ள கடிதத்தில், “‘அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழத்தில் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பும் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள்,...
செட்டிகுளம் பகுதியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் மதுவிலக்கு பிரிவு போலீசார் ரோந்து சுற்றி வந்த போது, ஜூனைத் என்பவர் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அவரிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் 55 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வெள்ளிச்சந்தை: சிறுமியிடம் அத்துமீறியவர் போக்சோவில் கைது
வெள்ளிச்சந்தை அருகே பிள்ளைதோப்பு பகுதி சேர்ந்தவர் ஆரோக்கிய ஜோஸ் (43). மீன்பிடித் தொழிலாளி. இவருக்கு திருச்சியைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்தப் பெண் ஆரோக்கிய ஜோசை காதலித்து கடந்த 2018-ல் 2-ம் திருமணம் செய்தார். பின்னர் தனது மகளுடன் குமரி மாவட்டம் பிள்ளைதோப்பில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்தப் பெண் குழந்தை கடந்த 2022-ல் வயதுக்கு வந்தது. அதன் பின் சிறுமியிடம் ஆரோக்கிய ஜோஸ்...
அருமனை: நகைக்கடையில் திருடிய வாலிபர் கைது
அருமனை அருகே மேல்புறம் சந்திப்பில் நகைக்கடையில் கடந்த 15ஆம் தேதி இரவு திருட்டு நடந்ததாக கடை உரிமையாளர் பத்மநாபன் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் அருமனை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று (26-ம் தேதி) இரவு மேல்புறம் அருகே செம்மங்காலையில் அருமனை சப் இன்ஸ்பெக்டர் சுஜின் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்தவரை பிடித்து அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
விசாரித்ததில்...
குமரி: மாணவியை கூட்டு பலாத்காரம் செய்ததாக 3 பேர் மீது புகார்
குமரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி வீட்டின் அருகே உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் அவரை திடீரென காணவில்லை.
இதனால் பயந்து போன பெற்றோர் மகளை காணவில்லை என போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் மாணவியை இரவு முழுவதும் பல இடங்களில் தேடினர். இந்த நிலையில் நேற்று 27ஆம் தேதி அதிகாலையில் மாணவி வீட்டுக்கு வந்துள்ளார். பெற்றோர் கேட்டபோது, வீட்டின் அருகே உள்ள சாலையில் சென்றபோது தன்னை காதலன் ஏமாற்றி அழைத்து...
களியக்காவிளை: டயர் வியாபாரிக்கு வெட்டு – வழக்கு பதிவு
குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியை சார்ந்தவர் சிவகுமார். இவர் படந்தாலுமூடு பகுதியில் டயர் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சார்ந்த கவின் என்பவருக்கும் நிலத்தகராறில் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று கவின் மது அருந்திவிட்டு வெட்டுக்கத்தியுடன் சிவகுமார் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றியவே மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியை எடுத்து சிவகுமாரை வெட்டியுள்ளார். பலத்த காயம் அடைந்த சிவகுமார் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் வந்தனர். இந்த சமயத்தில் கவின் தப்பி ஓடியுள்ளார்.
அப்பகுதியினர் சிவகுமாரை மீட்டு குழித்துறை...
கருங்கல்: மன்மோகன்சிங் உருவப்படத்திற்கு காங்கிரஸ் அஞ்சலி
கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் ராஜீவ் காந்தி சந்திப்பில் வைத்து மறைந்த முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று (டிச.27) நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் தலைமையில் அவரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட, வட்டார, மாநில நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
குமரி: ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ முகாமை தொடங்கி வைத்த மேயர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வட்டவிளை பகுதியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கன்னியாகுமரி மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக, கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமினை மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் இன்று விளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கினார்.
மேக்ஸ் – திரை விமர்சனம்
போலீஸ் அதிகாரி அர்ஜுன் என்ற மேக்ஸ் (கிச்சா சுதீப்), இடைநீக்கம் முடிந்து புதிதாகப் பொறுப்பேற்க வருகிறார் புதிய ஸ்டேஷனுக்கு. வரும் வழியில் பெண் போலீஸிடம் தகராறில் ஈடுபடும் இரண்டு பேரை, அடித்து லாக்கப்பில் தள்ளுகிறார். அவர்கள் அமைச்சரின் மகன்கள் என்று தெரிந்ததும் மற்ற போலீஸ்காரர்கள், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தயங்குகிறார்கள். இந்நிலையில் லாக்கப்பில் இருந்தவர்கள் திடீரென்று இறந்து கிடக்கிறார்கள். அவர்களின் செல்போனில் முக்கிய ஆதாரங்கள் இருப்பதால் அமைச்சரின் ஆட்கள் அந்த இருவரையும் மீட்க வருகிறார்கள். அவர்களைக் கொன்றது யார்? மறுநாள்...














