Google search engine
Home 2024

Yearly Archives: 2024

தேசிய விருது பிரிவுகளில் இந்திரா காந்தி, நர்கிஸ் தத் பெயர்கள் நீக்கம்

தேசிய திரைப்பட விருதுகளின் ஒரு பகுதியாக இருந்த சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருது மற்றும் தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது ஆகிய பிரிவுகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. தேசிய விருதுகள் மற்றும் பரிசுத் தொகைகளை சீரமைப்பதற்கான குழு ஒன்றை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரையில் பேரில், 70-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி , ‘சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருது’...

ஜாலி வசனங்களும், ஈர்க்கும் இசையும் – வினீத் ஸ்ரீனிவாசனின் ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ டீசர் எப்படி?

வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரணவ் நடித்துள்ள ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ மலையாளப் படத்தின் டீசரை மோகன்லால் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு மோகன்லாலின் மகன் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ‘ஹிருதயம்’. இந்தப் படத்தை வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார். ரூ.80 கோடி வசூலை எட்டிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தக் கூட்டணியின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள மலையாள படம் ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ (Varshangalkku Shesham). படத்தில் நிவின் பாலி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்....

‘வித்தைக்காரன்’ படத்துக்காக மேஜிக் கற்ற சதீஷ்

ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில், கே.விஜய் பாண்டி தயாரித்துள்ள படம், ‘வித்தைக்காரன்’. அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கியுள்ளார். யுவகார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். சதீஷ் நாயகனாக நடிக்கும் இதில் சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ், சுப்பிரமணிய சிவா உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் 23 -ம் தேதி வெளியாகிறது. படம் பற்றி செய்தியாளர்களிடம் நடிகர் சதீஷ் கூறியதாவது: விமான நிலையத்தில் சிக்கி இருக்கும் ரூ.25 கோடி மதிப்புள்ள வைரத்தை மூன்று குழு கைப்பற்றத் திட்டமிடுகிறது. அது யாரிடம் சிக்கியது என்பது கதை. இதில் 2 வேடங்களில் நடித்துள்ளேன்....

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி 242 ரன்களுக்கு ஆல் அவுட்

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வதுடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. ருவான் டி ஸ்வார்ட் அரை சதம் அடித்தார். 2-ம் நிலை வீரர்களை உள்ளடக்கிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் மவுண்ட் மவுங்கனுயில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூஸிலாந்து 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம்...

AUS vs WI கடைசி டி20 போட்டி | ஆந்த்ரே ரஸ்ஸல் விளாசலில் மே.இ.தீவுகளுக்கு ஆறுதல் வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டி 20 கிரிக்கெட் போட்டியில் ஆந்த்ரே ரஸ்ஸல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு ஆகியோரது அதிரடியால் 37 ரன்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 8.4 ஓவர்களில் 79 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஜான்சன் சார்லஸ் 4,...

பிரைம் வாலிபால் லீக் 3-வது சீசன்: சொந்த மண்ணில் பட்டம் வெல்ல ஆயத்தமாகும் சென்னை பிளிட்ஸ்

பிரைம் வாலிபால் லீக்கின் 3-வது சீசன்போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (15-ம் தேதி) தொடங்குகிறது. வரும் மார்ச் 21-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபன்டர்ஸ், பெங்களூரு டார்படோஸ், கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை பிளிட்ஸ், ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ், மும்பை மீட்டியார்ஸ் ஆகியஅணிகளுடன் டெல்லி டூபான்ஸ் அறிமுகஅணியாக களமிறங்குகிறது. முதல் இரு சீசன்களிலும் லீக் சுற்றை கடக்காத சென்னை பிளிட்ஸ் அணியானது இம்முறை சொந்த மண்ணில் பட்டம் வெல்லும்...

துப்பாக்கி சுடுதலில் இஷா, மதீனனுக்கு தங்கப் பதக்கம்

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஸ்பெயினில் உள்ள கிரனடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர்ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இஷா அனில் தக்சலே இறுதி சுற்றில் 251.8 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஷாம்பவி ஷிர்சாகர் 227.6 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா 3 பதக்கங்களையும் முழுமையாக கைப்பற்றியது. உமாமகேஷ் மதீனன் இறுதி சுற்றில் 252.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார்....

தேசிய சப்-ஜூனியர் அட்யா பட்யா: தமிழக மகளிர் அணிக்கு வெண்கலப் பதக்கம்

மகாராஷ்டிர மாநிலம் ஷேகானில் உள்ள மவுலி பள்ளியில் தேசிய சப்-ஜூனியர் அட்யா பட்யா சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் தமிழக ஆடவர் அணி லீக் சுற்றில் கேரளா, டெல்லி, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய அணிகளை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் கால் இறுதி சுற்றில் தமிழக அணி, புதுச்சேரியிடம் தோல்வி அடைந்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.அதேவேளையில் மகளிர் பிரிவில் தமிழக அணி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. லீக் சுற்றில் தமிழக மகளிர் அணி கோவா, அருணாச்சல் பிரதேசம், ஆந்திரா,...

சோலார் பேனல் பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம்: ரூ.75,000 கோடியில் ‘சூரிய வீடு’ திட்டம்

சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கும் வகையில் ‘பிரதமரின் சூரிய வீடு: இலவச மின்சார திட்டம்’ ரூ.75,000 கோடிக்கும் மேற்பட்ட முதலீட்டில் தொடங்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதன்மூலம் வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்ளும் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.நாட்டில் சூரிய மின்சக்தி பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியாக, வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் (சூரிய மின்சக்தி தகடுகள்) பொருத்துவதற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அரசு மானியங்கள் கிடைப்பதன் மூலம், அதிகமான குடும்பங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள்...

ராமரை காட்டுக்கு அனுப்பியது போல் நிதிஷ் என்னை மக்களிடம் அனுப்பியுள்ளார்: தசரதருடன் ஒப்பிட்டு தேஜஸ்வி விமர்சனம்

பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரைதசரதருடன் ஒப்பிட்டு, சட்டப்பேரவையில் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேசினார். பிஹார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது: முதல்வர் நிதிஷ் குமார், என்னை அவரது வாரிசாக பலபொதுக்கூட்டங்களில் கூறியிருக்கிறார். பாஜகவினர் ராமரை பற்றி பேசுகின்றனர். நிதிஷ் குமாரை நான் தசரதராக கருதுகிறேன். மனைவி கைகேயியின் பேச்சை கேட்டு தசரதர், ராமரை காட்டுக்கு அனுப்பியது போல், நிதிஷ் குமார் என்னை மக்களிடம் அனுப்பியுள்ளார். உடன் இருக்கும் கைகேயி குறித்து நிதிஷ்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: பாஜகவை பார்த்து முதல்வர் பயப்படுகிறார் -நயினார்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகின்ற 15ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நாகர்கோவில் வரும் பிரதமர் மோடி, ரோட்...

நாகர்கோவிலில் வாக்கு என்னும் மையத்தில் தீவிர ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல் பணிகளின் ஒரு பகுதியாக, ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகள் கோணம் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன....

குமரி: கோவிலில் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள நாராயணசாமி கோவிலில் நேற்று மாலை பணி விடை செய்ய சென்ற பூசாரி செல்வகுமார், கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். சாமி கழுத்தில் இருந்த தங்க சங்கிலி,...