Home 2024
Yearly Archives: 2024
147 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 22 சிக்ஸர்கள் விளாசப்பட்டு 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.இந்தப் போட்டியில் இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஒரே இன்னிங்ஸில் 12 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமின் சாதனையை (1996-ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக) ஜெய்ஸ்வால் சமன் செய்தார்.மேலும் 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 20...
நாட்டின் சிறந்த முதல்வர்கள் பட்டியல்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடம், யோகி ஆதித்யநாத்துக்கு 2-ம் இடம்
நாட்டை ஆளும் மாநில முதல்வர்களின் மக்களின் செல்வாக்கு மற்றும் மாநில வளர்ச்சிக்கான செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பெரும்பான்மையான மக்களின் செல்வாக்கை பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு 52.7 சதவீத ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
இரண்டாவது இடம் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்துக்கு கிடைத்துள்ளது. அவர் மாநிலத்தில் 51.3 சதவீத மக்களின் ஆதரவை பெற்றுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தை அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பிடித்துள்ளார். அவர் 48.6 சதவீத மதிப்பீட்டை...
சம்ஸ்கிருத அறிஞர் ராமபத்ராச்சார்யா, உருது கவிஞர் குல்சாருக்கு ஞானபீட விருது
1965-ம் ஆண்டு முதல், அங்கீகரிக்கப்பட்ட 22 இந்திய மொழிகளில் இலக்கியத்தில் சிறந்து விளங் கும் ஆளுமைகளுக்கு மத்திய அரசின் ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான விருதை ஞானபீட தேர்வுக் குழு நேற்று முன்தினம் அறிவித்தது. மிகச் சிறந்த உருதுக் கவிஞர்களில் ஒருவராக அறியப்படுபவர் குல்சார் (89). பஞ்சாப்பில் பிறந்த அவரது படைப்புகளுக்காக 2002-ம்ஆண்டு அவருக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது. 2004-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
கவிஞர், பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் குல்சார்....
“கட்சியிலில் இருந்து விலகமாட்டார்: காங்கிரஸின் தூண் கமல்நாத்” – திக்விஜய் சிங்
மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கமல்நாத்தின் மகன் நகுல்நாத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சுயவிவரக் குறிப்பில் இருந்து காங்கிரஸ் கட்சி என்ற அடையாளத்தை நீக்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவர் தனது தந்தையுடன் பாஜகவில் இணையக்கூடும் என்ற செய்திகள் வெளியானது.இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியது: கமல்நாத் தனது அரசியல் பயணத்தை நேரு-காந்தி காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தொடக்கியவர். அப்படிப்பட்டவர் காங்கிரஸ் குடும்பத்தை விட்டு பிரிவார் என்பதை நினைத்து பார்க்க முடியாது. அவர்...
கடந்த தேர்தலில் தோற்ற தொகுதிகளான 161-ல் வெற்றி லட்சியம்; 67 நிச்சயம் – பாஜக வியூகம்
பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நாடு முழுவதும் இருந்து 11,500 பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். இரு நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.வரும் தேர்தலில் பாஜக 370 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி 400 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் உறுதிபட கூறி வருகின்றனர். இதற்காக பூத் வாரியாக தீவிரவாக பணியாற்ற பாஜக தொண்டர்களுக்கு கட்சி தலைமை அறிவுரை...
“2ஜி, 3ஜி, 4ஜி-கள் நிறைந்தது இண்டி கூட்டணி” – அமித் ஷா விமர்சனம்
பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: மகாபாரதத்தில் கவுரவர்கள் பாண்டவர்கள் என 2 பிரிவினர் இடையே போர் நடந்தது. இதுபோல இப்போது வரும் மக்களவைத் தேர்தலில் 2 பிரிவுகள் உள்ளன.இதில் ஒன்று பாஜக தலைமையிலான தே.ஜ.கூ, மற்றொன்று காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி. இதில் இண்டி கூட்டணி என்பது வாரிசு கட்சிகளின் கூட்டணியாக உள்ளது. இந்தக் கட்சிகள் நாட்டில் வாரிசு அரசியல், ஊழல்,...
தமிழக அரசை மத்திய அரசு தினமும் அச்சுறுத்துகிறது: அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு
தமிழக அரசையும், அமைச்சர்களையும் மத்திய அரசு தினமும் அச்சுறுத்துகிறது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: 2019-ல் மக்களவைத் தேர்தல்நேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது வரை அடிக்கல் நாட்டிய அளவிலேயே அந்ததிட்டம் உள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர நிதி கேட்டால், கடன் கேட்டுள்ளோம் என்கின்றனர்.
பாஜக ஆட்சியில் 5 மாநில விவசாயிகள் விளை பொருட்களுக்கு உரிய விலை கேட்டு போராடி வருகின்றனர்....
ஒப்புகைச் சீட்டை எண்ணிய பிறகே தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்: பிப்.23-ல் விசிக ஆர்ப்பாட்டம்
யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் ஒப்புகைச் சீட்டையும் எண்ணிய பிறகே தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பிப்.23-ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் முறையைப் பாதுகாப்பது தான், இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அடிப்படையாகும். தற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதில் எளிதாக முறைகேடு செய்ய முடியும். ஆளும் கட்சிதான் விரும்பிய வேட்பாளரை வெற்றி...
திமுகவில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 2 வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன.தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என பலமுனை போட்டி நிலவுகிறது. இதில் திமுகவை பொறுத்தவரை, மநீம கட்சியைத் தவிர மற்ற கட்சிகளுடன்...
கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்போம்: ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் எச்சரிக்கை
கச்சத் தீவு திருவிழாவைப் புறக்கணிக்கப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராமேசுவரம் விசைப் படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர்.எல்லை தாண்டி மீன்பிடித்த தாக, பிப்ரவரி 3-ம் தேதி ராமேசுவரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களது 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்தது. இந்த வழக்கு விசாரணை, இலங்கை ஊர்க் காவல்துறை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதி கஜ நிதி பாலன், 20 மீனவர்களை விடுதலை செய்தும், 2-வது முறையாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மெல்சன் என்பவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், 2...














