“கட்சியிலில் இருந்து விலகமாட்டார்: காங்கிரஸின் தூண் கமல்நாத்” – திக்விஜய் சிங்

0
253

மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கமல்நாத்தின் மகன் நகுல்நாத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சுயவிவரக் குறிப்பில் இருந்து காங்கிரஸ் கட்சி என்ற அடையாளத்தை நீக்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவர் தனது தந்தையுடன் பாஜகவில் இணையக்கூடும் என்ற செய்திகள் வெளியானது.

இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியது: கமல்நாத் தனது அரசியல் பயணத்தை நேரு-காந்தி காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தொடக்கியவர். அப்படிப்பட்டவர் காங்கிரஸ் குடும்பத்தை விட்டு பிரிவார் என்பதை நினைத்து பார்க்க முடியாது. அவர் காங்கிரஸ் கட்சியில் வகிக்காத பதவிகளே இல்லை. நான் கமல்நாத்துடன் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அவர் காங்கிரஸ் கட்சியின் தூண் என்றார்.

இதனிடையே கமல்நாத், “ இதை மறுப்பது விஷயமல்ல. உங்களுக்கு ஏன் இந்த பரபரப்பு. அப்படி ஏதேனும் இருந்தால் உங்கள் அனைவரிடத்திலும் தகவல் தெரிவிக்கிறேன் என்று மழுப்பலாக கூறியுள்ளார். இருப்பினும், பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான செய்தி வதந்தி என்பதை கமல்நாத் திட்டவட்டமாக மறுக்கவில்லை.கமல்நாத், நகுல்நாத் திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லிக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 10 முதல் 11 எம்எல்ஏக்களுடன் அவர்கள் பாஜகவில் இணையலாம் என சில வட இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மற்றொருபுறம், மத்திய பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா தனது சமூக வலைதள பக்கத்தில் கமல்நாத், நகுல்நாத் படங்களை பகிர்ந்து ஜெய் ராம் என பதிவிட்டுள்ளது யூகங்களுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here