Google search engine
Home 2024

Yearly Archives: 2024

ரஞ்சி கோப்பையில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது தமிழக அணி

0
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தமிழக அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் பஞ்சாப் இடையிலான ஆட்டம் சேலத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 435 ரன்கள் குவித்தது. பாபா இந்திரஜித் 187 ரன்களும், விஜய் சங்கர் 130 ரன்களும் குவித்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய பஞ்சாப் அணி 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஃபாலோ ஆன் பெற்ற பஞ்சாப் அணி 3-ம் நாள் ஆட்ட...

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் மகளிர் பிரிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது. தென் கொரியாவின் பூசான் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மகளிர் அணி, உஸ்பெகிஸ்தானுடன் மோதியது. ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்தியாவின் அர்ச்சனா காமத் 11-7, 11-3, 11-6 என்ற செட்கணக்கில்ரிம்மாகுஃப்ரா னோவை தோற்கடித்தார். 2-வது ஆட்டத்தில் தியா சித்தலே 11-6, 10-12, 11-4, 11-6 என்ற செட் கணக்கில் ரோசலினா கதீவாவை வீழ்த்தினார். நட்சத்திர வீராங்கனையான மணிகா...

ரூ.17.47 கோடி செலவில் ஒலிம்பிக் அகாடமி சென்னையில் திறப்பு

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களை உருவாக்கும் வகையில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் வளாகத்தில் தமிழக அரசு சார்பில் ரூ.17.47 கோடி செலவில் ஒலிம்பிக் அகாடமி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மூன்றடுக்கு கொண்ட இந்த அகாடமியின் தரைதளத்தில் பன்நோக்கு விளையாட்டுத் தளம், முதல் தளத்தில் டேக் வாண்டோ மற்றும் ஜூடோ விளையாட்டுத் தளம், இரண்டாவது தளத்தில் வாள்வீச்சு தளம் மற்றும் மூன்றாவது தளத்தில் விளையாட்டு அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.இவற்றை நேற்று சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு...

‘இனி என்ன நடந்தாலும் அரசே பொறுப்பு’ – டெல்லி பேரணி; விவசாய சங்கத் தலைவர் எச்சரிக்கை

 “நாங்கள் டெல்லி நோக்கி முன்னேறுவது நிச்சயம். நாளை (பிப்.21) காலை 11 மணியளவில் டெல்லியை நோக்கி முன்னேறுவோம். இனி என்ன நடந்தாலும் அதற்கு அரசாங்கமே பொறுப்பு” என்று விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார். வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதலுக்கான உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை விவசாய சங்கத்தினர் மத்திய அரசுடன் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதில் ஒப்பந்த அடிப்படையில்...

கரோனா பாதிப்புக்கு பிறகு இந்தியர்களுக்கு அதிக அளவு நுரையீரல் பாதிப்பு

கரோனா பெருந்தொற்றால் ஏற்படும் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் குறித்து வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) மருத்துவமனை ஓரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வுக் கட்டுரை பிஎல்ஓஎஸ் என்ற சுகாதார இதழில் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனாவுக்கு பிறகு ஐரோப்பியர்கள் மற்றும் சீனர்களைவிட இந்தியர்கள் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நுரையீரல் சார்ந்த பிரச்சினை சிலருக்கு ஒரு வருடம் வரை நீடிக்கிறது. மீதமுள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த பிரச்சினையுடன் வாழ வேண்டிய நிலையில் உள்ளனர். கரோனா பாதிக்கப்பட்டவர்களில் சீனர்களை விட இந்தியர்களுக்குத்...

சுதந்திரம் அடைந்த பிறகு முதல்முறையாக சத்தீஸ்கர் கிராமத்தில் தேசிய கொடி பறந்தது

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா - பிஜாப்பூர் மாவட்ட எல்லையில் உள்ளது புவாரி கிராமம். இந்த கிராமத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருந்தது. இந்த கிராமத்தில் அவர்கள் சொல்வது தான் சட்டம். தனி அரசாங்கமே நடத்தி வந்த மாவோயிஸ்டுகளை மீறி கிராம மக்கள் ஒன்றும் செய்ய முடியாது. இந்த கிராமத்தில் இருந்து கொண்டே பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவது, சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்களை மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், மாவோயிஸ்டுகளை ஒடுக்க மத்திய அரசு தீவிர...

போராட்டம் நடத்தியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக வழக்கு: சித்தராமையாவுக்கு அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு முன் அனுமதியின்றி நடத்திய போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு உயர் நீதிமன்றம் விதித்த அபராத உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடைவித்தது. கடந்த பாஜக ஆட்சியில் அரசு ஒப்பந்ததாரர் சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் அமைச்சர் ஈஸ்வரப்பா 40 சதவீத கமிஷன் தொகை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் இந்த துயர முடிவை எடுக்க நேர்ந்ததாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, ஈஸ்வரப்பாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி,...

தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்

தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். முன்னதாக சட்டப்பேரவை சபாநாயகர் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கான அறிவிப்பை வாசிக்க தொடர்ந்து வேளாண் துறைக்கான பட்ஜெட்டை பேரவையி்ல் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது திமுக அரசின் 4-வது வேளாண் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கிய அம்சங்கள்: 10 லட்சம் வேப்ப மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு. 2 லட்சம் விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்கள்...

திமுக சிட்டிங் எம்.பி.க்களில் யார் யாருக்கு ‘நோ என்ட்ரி’? – உள்ளரசியல் நிலவரம்

கடந்த மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டது திமுக. இம்முறை 25 தொகுதிகளில் களம் காணும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே, தற்போது யாருக்கெல்லாம் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும், யாருக்கெல்லாம் வாய்ப்பில்லை என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் திமுக நடத்திய ‘ரகசிய சர்வே’ முக்கியப் பங்கு வகிக்கிறது. திமுக நடத்திய ரகசிய சர்வேயில், வடசென்னை கலாநிதி வீராசாமி, சேலம் பார்த்தீபன், திருநெல்வேலி ஞானதிரவியம், வேலூர் கதிர் ஆனந்த், கள்ளக்குறிச்சி கவுதம சிகாமணி, திருவண்ணாமலை அண்ணாதுரை ஆகியோர் மீது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவி வருவது...

தமிழக பட்ஜெட் 2024-25: 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் முதல் கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ வரை!

முதல் தலைமுறை தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், வரும் நிதியாண்டில் ரூ.101 கோடி அளவுக்கு மானிய உதவி அளிக்க நிதி ஒதுக்கப்படும். உலகின் பல்வேறு பகுதிகளில் முத்திரை பதித்த முன்னணி புத்தொழில் நிறுவனங்களும், இளம் தொழில்முனைவோரும் கலந்துகொள்ளும் வகையில் ‘உலக புத்தொழில் மாநாடு’, 2025 ஜனவரியில் சென்னையில் நடத்தப்படும்.தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் ஒட்டன்சத்திரம், மானாமதுரை, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோருக்கென 3 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். குறுந்தொழில் முனைவோர் தொழில் தொடங்க, கோவை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

ஈரானில் உள்ள இந்தியர்கள் வெளியேற வேண்டும்: இந்தியத் தூதரகம் வலியுறுத்தல்

ஈ​ரான்​-அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகளிடையே நீடித்த போர் இரு வாரங்​களுக்கு நிறுத்தப்​படு​வ​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று அறிவித்​தார். இந்​நிலை​யில் இந்​தி​யத் தூதரகம் நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: ஈரானில் உள்ள இந்தியர்கள் இந்​தி​யத்...

மத மூட நம்பிக்கையை நீதிமன்றம் வரையறை செய்யலாம்: சபரிமலை வழக்கில் நீதிபதிகள் கருத்து

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்​பன் கோயி​லில் அனைத்து வயது பெண்​களும் வழிபட அனு​ம​தி அளித்து, கடந்த 2018-ல் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்த மறு ஆய்வு மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி...

நாட்டின் முதல் கடல் விமானம் ரிஷிகேஷில் வெற்றிகரமாக சோதனை

நாட்​டில் முதல் கடல் விமானம் ரிஷிகேஷில் உள்ள கங்கை தடுப்​பணை​யில் நேற்று வெற்​றிகர​மாக சோதனை செய்யப்​பட்​டது. நாட்​டில் கடல் வழித்​தடம் மற்​றும் நீர்​நிலைகள் அதி​கள​வில் உள்ளன. விமான நிலை​யம் அமைக்க முடி​யாத இடங்​களில் கடல்...