Google search engine
Home 2024

Yearly Archives: 2024

என் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் நாட்டுக்காக அர்ப்பணிப்பேன்- பிரதமர் மோடி

3 நாட்கள் தியானம் முடித்து புறப்பட்ட பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் தனது கருத்தை பதிவு செய்தார். இந்தியாவின் கடைசி முனையான கன்னியாகுமரியில் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதமான உணர்வை அனுபவித்து வருகிறேன். பார்வதியும், சுவாமி விவேகானந்தரும் இந்த பாறையில் தியானம் செய்திருந்தனர். பின்னர் ஏக்நாத் ரானடே அவர்கள் இந்த கல் நினைவகத்தை அமைத்து விவேகானந்தரின் எண்ணங்களுக்கு உயிர் கொடுத்தார் ஆன்மீக வளர்ச்சியின் முன்னோடியான சுவாமி விவேகானந்தர் எனது லட்சியமாகவும், எனது ஆற்றலின் மூலமாகவும், எனது ஆன்மிக பயிற்சி யாகவும் இருந்துள்ளார். சுவாமிஜியின்...

‘காந்தாரி’ படத்தில் ஹன்சிகாவுக்காக 18 காட்சிகள் மாற்றம்

ஹன்சிகா இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம், ‘காந்தாரி’. ஆர். கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். மெட்ரோ சிரிஷ் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எல்.வி.முத்து கணேஷ் இசை அமைத்துள்ள இதன் திரைக்கதையை தயாரிப்பாளர் தனஞ்செயன் எழுதியுள்ளார். எமோஷனல் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இதன் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. விழாவில் தனஞ்செயன் பேசும்போது, “நரிக்குறவர் வாழ்க்கை முறை பின்னணியில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. நானும் எனது குழுவில் உள்ள சீனி செல்வராஜும் வசனம் எழுதியுள்ளோம். இதற்காக நரிக்குறவர் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று...

இந்தியாவுக்கு தமிழன் ஏன் தலைமை தாங்க கூடாது? – ‘இந்தியன் 2’ விழாவில் கமல்ஹாசன் கேள்வி

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், குல்ஷன் குரோவர், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ள படம் ‘இந்தியன் 2’. அனிருத் இசை அமைத்துள்ளார். லைகா, ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரித்துள்ளன. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. தயாரிப்பாளர் சுபாஷ்கரன், கமல்ஹாசன், ஷங்கர், இயக்குநர்கள் வசந்தபாலன், லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில், நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “ஷங்கர் அடைந்திருக்கும் இந்த உயரம் விபத்தோ, அதிர்ஷ்டமோ...

திரை விமர்சனம்: தி அக்காலி

போதைப் பொருள் கடத்தல் குறித்து விசாரித்து வருகிறார் போலீஸ் அதிகாரி ஹன்ஸா ரஹ்மான் (ஜெயக்குமார்). கல்லறையில் போதைப் பொருட்களைப் பதுக்கி வைப்பதாகக் கிடைக்கும் தகவலை அடுத்து ரகசியமாகக் கண்காணிக்கச் செல்லும்போது, சாத்தானை வழிபடும் குழு, விசித்திர பூஜை செய்து நரபலி கொடுப்பதை அறிகிறார். அவர்கள் யார், எதற்காக அந்த வழிபாடு, அவர்களைக் கண்டுபிடித்தார்களா? என்பதைப் புரிந்தும் புரியாமலும் சுற்றி வளைத்துச் சொல்கிறது படம். நம்பிக்கைகளின் அடிப்படையில் மனித குழுக்கள் பல்வேறு வழிபாட்டு முறைகளைக் கையாண்டு வருகின்றன. சாத்தானை வழிபடும் குழுக்களைப் பற்றியும் அதிகாரத் தைப்...

கிருத்திகா உதயநிதி – ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’: கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் பெற்றவர் கிருத்திகா உதயநிதி. இவர் இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியான ‘பேப்பர் ராக்கெட்’ வெப்சீரிஸ் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இந்தப் படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார். நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு,...

ஊடக நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டோக் 93 வயதில் 5-வது திருமணம்: காதலியை கரம் பிடித்தார்

பிரபல ஊடக நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டோக், தனது 93-வது வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் வெளியிட்டிருந்தார். அவரது காதலியான 67 வயதான எலெனா ஜோகோவாவை அவர் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பண்ணை வீட்டில் திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. எலெனா, ரஷ்ய நாட்டை சேர்ந்தவர். தற்போது அமெரிக்க நாட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். அவர் உயிரியல் துறை வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ரஷ்ய நாட்டு அரசியலில் ஈடுபட்டு வரும்...

நார்வே செஸ் தொடரில் சாதனை: பிரக்ஞானந்தாவுக்கு ஸ்டாலின், அண்ணாமலை வாழ்த்து

நார்வே செஸ் தொடரில் சாதனை படைத்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின்: நார்வே செஸ் தொடரில் முற்றிலும் வியத்தகு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் இளம் வீரர் பிரக்ஞானந்தா. மூன்றாம் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான மாக்னஸ் கார்ல்சனை வென்றதுடன், 5-ம் சுற்றில் தற்போது உலகின் 3-ம் நிலை வீரர் பேபியானோ கருணாவையும் ‘கிளாசிக்கல் செஸ்' வகைப் போட்டியில் வீழ்த்தியிருப்பது மிகப்பெரும் சாதனையாகும். டாப்-10 தரவரிசைக்குள் நுழைந்திருக்கும் உங்கள் வரவு நல்வரவாகட்டும் பிரக்ஞானந்தா....

T20 WC: தென் ஆப்பிரிக்காவுடன் இலங்கை இன்று பலப்பரீட்சை

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்க அணியுடன் இலங்கை அணி பலப்பரீட்சை செய்யவுள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று குரூப் டி பிரிவில் இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தில் இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன. தென் ஆப்பிரிக்க அணியானது கேப்டன் எய்டன் மார்கிரம் தலைமையில் களமிறங்குகிறது. அந்த அணியானது ஹெய்ன்ரிச் கிளாசன், குயிண்டன் டி காக், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரீசா ஹென்றிக்ஸ், மார்கோ...

T20 WC | அச்சுறுத்திய பப்புவா நியூ கினியா: 5 விக்கெட்டுகளில் மே.இந்தியத் தீவுகள் வெற்றி!

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் 137 ரன்கள் என்ற இலக்கை பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக போராடி எடுத்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. அந்த அணி வீரர் ராஸ்டன் சேஸின் ஆட்டம் இலக்கை சேஸ் செய்ய பெரிதும் உதவியது. கயானவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பவுலிங் தேர்வு செய்தது. பப்புவா நியூ கினியா முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள்...

இந்திய அணி பந்துவீச்சாளர்களுக்கு கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணி பந்துவீச்சாளர்களுக்கு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி நேற்று முன்தினம் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. நியூயார்க்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வென்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 23, சஞ்சு சாம்சன் 1, ரிஷப் பந்த் 53, சூர்யகுமார் யாதவ் 31,...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில் நடிகர் சரத்குமார் பிரசாரம்

பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சரத்குமார், கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். 17 ஆம் தேதி விளவங்கோடு, பத்மநாபபுரம், கிள்ளியூர் சட்டமன்ற...

களியக்காவிளை: வீட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு

களியக்காவிளை, செம்மண்விளை பகுதியைச் சேர்ந்த ஆனி ஜீவா (39) என்பவர் குடும்பத்துடன் வேளாங்கண்ணி ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க...

நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (ஏப்ரல் 10) வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பிற்பகலில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. நீதிமன்ற சாலை, ஒழுகினசேரி, வடசேரி,...