Home 2024
Yearly Archives: 2024
என்டிஏ.வுக்கு 340, இண்டியாவுக்கு 200 இடம்: டெல்லியில் சூதாட்டம்
நாடு முழுவதும் 2 வாரங்களுக்கு முன்பே மக்களவை தேர்தல் முடிவுகள் தொடர்பான சூதாட்ட சந்தை தொடங்கிவிட்டது.
குறிப்பாக, டெல்லியில் உள்ளசூதாட்டக்காரர்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 341 முதல் 343 இடங்கள் கிடைக்கும் என்றும் இண்டியா கூட்டணிக்கு 198 முதல் 200 இடங்கள் கிடைக்கும் என்றும் கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக தனியாக 310 முதல் 313இடங்களிலும் காங்கிரஸ் தனியாக 57 முதல் 59 இடங்களிலும் வெற்றி பெறும் என சூதாட்டக்காரர்கள் கணித்துள்ளனர். இதுபோல டெல்லியில் உள்ள 7 இடங்களில் 6-ல் பாஜகவும்...
நகைச்சுவை நிகழ்ச்சியை பார்த்து தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்தவர் மயங்கி விழுந்தார்: மருத்துவர் விளக்கம்
தொலைக்காட்சி ஒன்றில் நகைச்சுவை நிகழ்ச்சியை ரசித்து பார்த்துக்கொண்டிருந்த 53 வயது நபர் ஒருவர் சிரிப்பை அடக்க முடியாமல் திடீரென மயங்கி கீழே விழுந்த சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
‘வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்’ என்றும், 'மனதார சிரிப்பவர்களின் ஆயுள் நீடிக்கும்' என்றும் பலர் சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால், ஹைதராபாத்தை சேர்ந்த ஷியாம் (53) என்பவர், தொலைக்காட்சி ஒன்றில் நகைச்சுவை நிகழ்ச்சியை பார்த்து விழுந்து, விழுந்து சிரித்துள்ளார். அப்போது சிரிப்பை அடக்க முடியாமல் மயங்கமடைந்து விழுந்துள்ளார்.
உடனே அவரை, அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் அருகில்...
நான்கு திசைகளிலும் நாம் விரைந்து பணியாற்றுவது அவசியம்
எனக்குள் ஒரு பற்றற்ற உணர்வு வளர்ந்தது. என் மனம் புற உலகிலிருந்து முற்றிலும் விலகியது. இத்தகைய பெரிய பொறுப்புகளுக்கு மத்தியில் தியானம் சவாலானதாக மாறுகிறது, ஆனால் கன்னியாகுமரி மண் மற்றும் சுவாமி விவேகானந்தரின் உத்வேகம் அதை சிரமமற்றதாக ஆக்கியது. கன்னியாகுமரியில் இதே இடத்தில் சுவாமி விவேகானந்தர் தியானம் செய்தபோது என்ன அனுபவித்திருப்பார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
இந்தப் பற்றற்ற நிலைக்கு மத்தியில், அமைதிமற்றும் மவுனத்தின் மத்தியில், என் மனம் பாரதத்தின் பிரகாசமான எதிர்காலத்தைப் பற்றியும், பாரதத்தின் குறிக்கோள்களைப் பற்றியும் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தது. கன்னியாகுமரியில்...
வாக்கு எண்ணிக்கை: ஆந்திராவில் 144 தடை உத்தரவு
ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ்குமார் மீனா நேற்று அமராவதியில் கூறியதாவது:
ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் முன் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணி முதல் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் வெளியாவதை முன்னிட்டு ஆந்திராவில் 25 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமலாபுரம் மக்களவை தொகுதிக்கான முடிவு வெளியாக அதிகபட்சம் 9 மணி...
கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா: நலத்திட்ட உதவி, விளையாட்டு, இலக்கிய நிகழ்வுக்கு ஏற்பாடு
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி 100-க்கும் மேற்பட்ட இலக்கிய நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதுடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில், அரசியல் ஆதவனாக வந்த அறிவாலயம் என்ற தலைப்பில் வாழ்த்தரங்கம் சென்னை குருநானக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இதில், மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் பேசும்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா சென்னையில் கடந்தாண்டு ஜூன் 4-ம் தேதி தொடங்கி 6...
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு வழங்க கூடாது: அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி எனபல மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இப்பகுதி இருந்தபோது, 1929-ம் ஆண்டு, ‘தி பாம்பேபர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்’ (பிபிடிசி) என்ற நிறுவனத்துக்கு, 99 ஆண்டுகால குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. வரும் 2028-ம் ஆண்டுடன் குத்தகை நிறைவு பெறும் நிலையில், அந்த இடத்துக்கு ராயத்து வரி பட்டா வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றம், பின்னர் உச்ச...
அரிசி உற்பத்தியில் தமிழகத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது ஏன்? – முதல்வர் விளக்கமளிக்க பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை
இந்தியாவில் அரிசி உற்பத்தியில் 2-வது இடத்தில் இருந்த தமிழகம் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது ஏன்? என்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மூத்த நிர்வாகி ஏ.வி.துரைராஜ் தலைமையில் நாகையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்றுப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
காவிரி டெல்டாவில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி, எள், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு...
பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோதே கழன்று ஓடிய பேருந்து சக்கரம்
பழநி அருகே தீர்த்தக்கவுண்டன்வலசு கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் முன்பக்கச் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழநியிலிருந்து நேற்று காலை தீர்த்தக்கவுண்டன்வலசு கிராமத்துக்கு அரசு பேருந்து புறப்பட்டது. பேருந்தை நீதிபாண்டியன் (52) ஓட்டினார். பழநி அருகேயுள்ள வேப்பன்வலசு கிராமத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட சற்றுநேரத்தில் பேருந்தின் முன்பக்கத்தின் இடதுபுற சக்கரம் கழன்று ஓடி சாலையோரம் இருந்த சாக்கடை கால்வாயில் விழுந்தது. அதைக் கண்ட பயணிகளும், சாலையில் சென்ற மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
நிலைமையை உணர்ந்த ஓட்டுநர், சாதுர்யமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தினார்....
இண்டியா கூட்டணிக்கு சாதகமாக முடிவு வரவில்லை என்றால் தலைவர்கள் ஒற்றுமையின்மையே காரணம்: ஆர்.எஸ்.பாரதி கருத்து
மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஒருவேளை இண்டியா கூட்டணிக்கு சாதகமாக வரவில்லை என்றால், அதற்கு கூட்டணியில் உள்ள சில தலைவர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையே காரணம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்ததாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாகவே உள்ளன. இந்நிலையில், ஐஏஎன்எஸ் செய்திமுகமையிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல்முடிவு தொடர்பாக கூறியிருப்பதாவது:
மக்களவை தேர்தல் முடிவுகள் ஒருவேளை இண்டியா கூட்டணிக்கு சாதகமாக வரவில்லை என்றால், கூட்டணியில் உள்ள சில தலைவர்களிடையே இருந்த...
T20 WC | “கடின உழைப்பை நம்புகிறோம்” – இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து பாக். கேப்டன் பாபர் அஸம்
வரும் 9-ம் தேதி நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்தப் போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் கூறியதாவது.
“மற்ற எல்லா போட்டிகளை விடவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருக்கும். அது அனைவரும் அறிந்ததே. இந்தப் போட்டி வீரர்கள் மட்டுமல்லாது ரசிகர்கள் மத்தியிலும் வித்தியாசமான வைப் மற்றும் உற்சாகமூட்டும் உணர்வை தரும். உலகில்...














