Google search engine
Home 2024

Yearly Archives: 2024

குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை

குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலையில் பரவலாக மழை பெய்த நிலையில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்துள்ளது. கொட்டாரம் பகுதியில் நேற்று காலை முதலே மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 5 மணி நேரம் இடைவிடாது வெளுத்து வாங்கியது. இடைவிடாது கொட்டிய கனமழையின் காரணமாக அந்த பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. சாமி தோப்பு, முகிலன் குடியிருப்பு, அகஸ்தீஸ்வரம், மயிலாடி, அஞ்சுகிராமம், சுசீந்திரம் பகுதிகளில்...

மீன்பிடி தடைகாலம் முடிய இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில் தயாராகும் மீனவர்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகு கள் ஆழ் கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை, திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு...

ஜூன் 11-ல் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம்: பாஜக வளர்ச்சியை தடுக்க முக்கிய ஆலோசனை

தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு வரும் 11-ம் தேதி சென்னையில் கூடுகிறது. அதில் பாஜக தமிழகத்தில் வளர்ச்சி பெறுவதை தடுப்பது குறித்து ஆலோசிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் வென்றுள்ளது. விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் காங்கிரஸின் முக்கிய எதிர்க்கட்சியான பாஜக பல தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு வரும் 11-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கட்சியின் மேலிட பார்வையாளர் அஜோய்குமார்...

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை தண்ணீர் திறக்க வாய்ப்புக் குறைவு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்புக் குறைவு என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நூலாக்கம் செய்துள்ள தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் கையேட்டை வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெற்றுக் கொண்டார். இதையடுத்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்...

T20 WC | சீரற்ற பவுன்ஸர்களால் பேட்ஸ்மேன்கள் காயம்: சர்ச்சையாகும் நியூயார்க் ஆடுகளம்

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று முன்தினம் அயர்லாந்தை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. நியூயார்க்கில் உள்ள நசாவு கண்டி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்தஅயர்லாந்து அணி 16 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வேகப்பந்து வீச்சுக்கு முற்றிலும் சாதகமாக அமைந்திருந்த மைதானத்தை இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். ஹர்திக் பாண்டியா 3, அர்ஷ்தீப் சிங் 2, ஜஸ்பிரீத் பும்ரா 2 விக்கெட்களை வீழ்த்தினர்....

T20 WC | மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆல்ரவுண்ட் திறனால் ஓமனை 39 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸின் ஆல்ரவுண்ட் திறனால் ஓமன் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. மேற்கு இந்தியத் தீவுகளின் பிரிட்ஜ்டவுனில் நேற்றுநடைபெற்ற இந்த ஆட்டத்தில்முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் 12 ரன்களில் பிலால் கான் பந்திலும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 14 ரன்களில் மெஹ்ரான் கான் பந்திலும் வெளியேறினர். கிளென் மேக்ஸ்வெல் சந்தித்த...

சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வென்றது அமெரிக்கா: T20 WC

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - ஏ’ பிரிவு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வென்றது அமெரிக்கா. இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் 159 ரன்கள் எடுத்தன. ஆட்டம் சமனில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அமெரிக்காவில் டாலஸில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அமெரிக்கா பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அந்த அணி 26 ரன்கள்...

யுவா கபடியில் வேல்ஸ் அணி சாம்பியன்

யுவா கபடி தொடரின் தமிழக கிளப் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையை அடுத்த பொன்னேரியில் நடைபெற்று வந்தது. மாநிலம் முழுவதிலும் இருந்து 16 அணிகள் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வேல்ஸ் பல்கலைக்கழகம் - கற்பகம் பல்கலைக்கழகம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தொடக்க முதல் ஆதிக்கம் செலுத்திய வேல்ஸ் பல்கலைக்கழகம் 49-19 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றது. வேல்ஸ் பல்கலைக்கழகம் அணிரெய்டின் வாயிலாக 23 புள்ளிகளையும், டேக்கிள் வாயிலாக 16 புள்ளிகளையும், ஆல் அவுட் செய்ததின் மூலம் 8 புள்ளிகளையும்,...

“எங்களை விட அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டது” – பாபர் அஸம்: T20 WC

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவியது பாகிஸ்தான் அணி. இந்நிலையில், இந்த ஆட்டத்துக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்தது. “நாங்கள் பேட் செய்த போது முதல் ஆறு ஓவர்களை சிறப்பாக கையாளவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவாக அமைந்தது. பேட்ஸ்மேன்கள் நிலையாக ரன் எடுப்பதும், பார்ட்னர்ஷிப் அமைப்பதும் அவசியமானது. பந்துவீச்சிலும் எங்களுக்கு இதே நிலை தான். முதல் 6 ஓவர்கள் சிறப்பாக அமையவில்லை. எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களும் மிடில் ஓவர்களில்...

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் துள்ளல் நடனமிட்டு நுழைந்த சுனிதா வில்லியம்ஸ்

இந்திய நேரப்படி வியாழக்கிழமை (ஜூன் 6) இரவு 11 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தார் சுனிதா வில்லியம்ஸ். அவர் புதன்கிழமை அன்று போயிங் ஸ்டார்லைனர் மூலம் விண்ணுக்கு புறப்பட்டார். சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததை உற்சாகத்துடன் அவர் கொண்டாடினார். துள்ளல் நடனத்துடன் அவர் உள்ளே நுழைய சக விண்வெளி வீரர்கள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர். இதனை போயிங் ஸ்பேஸ் நிறுவனம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அவருடன் பேரி வில்மோரும் சென்றுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புறப்பட்ட...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில் நடிகர் சரத்குமார் பிரசாரம்

பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சரத்குமார், கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். 17 ஆம் தேதி விளவங்கோடு, பத்மநாபபுரம், கிள்ளியூர் சட்டமன்ற...

களியக்காவிளை: வீட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு

களியக்காவிளை, செம்மண்விளை பகுதியைச் சேர்ந்த ஆனி ஜீவா (39) என்பவர் குடும்பத்துடன் வேளாங்கண்ணி ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க...

நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (ஏப்ரல் 10) வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பிற்பகலில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. நீதிமன்ற சாலை, ஒழுகினசேரி, வடசேரி,...