Home 2024
Yearly Archives: 2024
குமரி -தாரகை கத்பர்ட்- எம். எல். ஏ வுக்கு வாழ்த்து
விளவங்கோடு சட்ட மன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்ற தாரகை கத்பர்ட , அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து நேற்று பொறுப்பேற்று கொண்டார். தாரகை கத்பட் அவர்களுக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர். எஸ். ராஜன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் அருகில் ஐஎன்டியூசி குமரி கிழக்கு மாவட்ட தலைவர் டாக்டர் சிவகுமார் உட்பட பலர் இருந்தனர்.
எஸ்.ஐ., மீது தாக்குதல் முன்னாள் ஏட்டு மகன் கைது
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே போலீஸ் எஸ்.ஐ.,யை வெட்டிக் கொல்ல முயன்ற மாஜி ஏட்டு மகனை போலீசார் கைது செய்தனர்.
மணவாள குறிச்சி அருகே கருங்காலிவிளையை சேர்ந்தவர் புஷ்பலதா. மாற்றுத்திறனாளியான இவர் கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஏட்டு செல்வ பெருமாள் மகன் மகேந்திர கொடிலனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
நேற்று முன்தினம் மகேந்திர கொடிலன் மண்வெட்டியால் புஷ்பலதா வீட்டு கூரையை அடித்து உடைத்துக் கொண்டிருந்தார். தகவலறிந்த மணவாளக்குறிச்சி எஸ்.ஐ., வில்சன், நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு எஸ்.ஐ., பிரபு...
போலீசார் மீது பயங்கர தாக்குதல் புகாரை விசாரித்தபோது கொடூரம்
மணவாளக்குறிச்சி அருகே கருங்காலிவிளையைச் சேர்ந்தவர் புஷ்பலதா. மாற்றுத்திறனாளியான இவர், கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு செல்வபெருமாள் மகன் மகேந்திர கொடிலனுக்கும், 40, முன்விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் மகேந்திர கொடிலன், புஷ்பலதாவிடம் தகராறு செய்தார். மணவாளக்குறிச்சி எஸ்.ஐ., வில்சன், நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு எஸ்.ஐ., பிரபுநாதன் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று மகேந்திர கொடிலனை தடுக்க முயன்றனர்.
அப்போது, அவர் தன் கையில் இருந்த மண்வெட்டியால் எஸ்.ஐ., பிரபுநாதனை பயங்கரமாக வெட்டினார். இதை தடுக்க முயன்ற...
ஞானம் வேண்டுமென்றால்… – சமந்தா அறிவுரை
தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, அதற்காகச் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாகக் கூறி இருந்தார். கூடவே, ட்ரலலலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் மூலம் ‘மா இன்டி பங்காரம்’ என்ற படத்தை நடித்து தயாரிக்க இருப்பதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில் கோவை ஈஷா மையத்துக்குச் சென்ற சமந்தா, அங்கு தியானம் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், ‘நம்மில் பலர் குரு அல்லது வழிகாட்டியை தேடுகிறோம். உங்கள் வாழ்வை ஒளிரச்...
ஆகஸ்ட் 15-ல் வெளியாகிறதா ‘தங்கலான்’?
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் இதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. கடைசியாக ஜூன் 20-ம்தேதி வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ஆக.15-ம் தேதி சுதந்திர தினத்தன்று ரிலீஸ் ஆகும் என்று புதிய தகவல்...
இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், அதிதி பாலன், ஜான் கொக்கேன், இளங்கோ குமாரவேல் உட்பட பலர் நடித்த படம், கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இங்கிலாந்து தேசிய திரைப்பட விழாவில், சிறந்த வெளிநாட்டு படப் பிரிவில் ‘கேப்டன் மில்லர்’ படமும் பூமி பட்னேகர் நடித்த ‘பக்ஷக்’ என்ற இந்தி படமும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
ஆடம் ஸாம்பா சுழலில் சுருண்டது நமீபியா: சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா | T20 WC
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது ஆஸ்திரேலிய அணி.
ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடரில் ஆன்டிகுவாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா - நமீபியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நமீபியா 17 ஓவர்களில் 72 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடக்க வீரர்களான மைக்கேல் வான் லிங்கன் 10, நிக்கோலஸ் டாவின் 2...
கடனை வசூலிக்க வங்கிகள் லுக் – அவுட் நோட்டீஸை பயன்படுத்த முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
டெல்லியில் ஒரு நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர் நிறுவனம் சார்பாக யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவிடமிருந்து பெற்ற ரூ.69 கோடி கடனுக்கு உத்தரவாதம் அளித்திருந்தார். இதையடுத்து, அவர் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி வேறு நிறுவனத்தில் சேர்ந்துவிட்டார்.
இவர் கடன் வாங்கிய நிறுவனம் கடனை திருப்பிச் செலுத்த தவறியதையடுத்து, உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் வங்கி அவருக்கு எதிராக லுக் - அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டது.
இதை எதிர்த்து அந்த இயக்குநர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான விசாரணையின்போது நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளதாவது:
தற்போதைய வழக்கில், மனுதாரருக்கு...
46 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட சந்திரபாபு
இந்திய அரசியல் வரலாற்றில் தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல்வாதிகள் சிலரில் சந்திரபாபு நாயுடுவும் ஒருவர். தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்தை உடனுக்குடன் அமல்படுத்தும் அரசியல் தலைவர். ஒருங்கிணைந்த ஆந்திராவில் ஐ.டி. துறையை முடுக்கி விட்டவர்.
திருப்பதி அருகே நாராவாரி பல்லி எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் சந்திரபாபு. கடந்த 1975-ல்காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவசரநிலை காலத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்திக்கு ஆதரவு தெரிவித்தார்.
சந்திரபாபுவின் ஆற்றலை கண்டு அவரை 1978-ல் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் களம்இறக்கியது....
சந்திரபாபு நாயுடுவின் 9 வயது பேரனுக்கு ஒரே வாரத்தில் ரூ.1.7 கோடி வருமானம்
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 135 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, அவர் ஆந்திர மாநிலத்தின் முதல்வராக நான்காவது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
இதையடுத்து சந்திரபாபு நாயுடு குடும்பத்தினரால் நடத்தப்படும் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு சாதனைஉச்சத்தை தொட்டது. ஹெரிடேஜ்ஃபுட்ஸ் பங்குகளின் விலை இரண்டு வாரங்களில் இரண்டு மடங்கு அதிகரித்தது. இதனால்,அந்த நிறுவனத்தில் 35.7 சதவீதபங்குகளை வைத்திருக்கும் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு ஜாக்பாட் அடித்தது.
ஹெரிடேஜ் நிறுவனத்தில் சந்திரபாபு நாயுடு மனைவி...














