Google search engine
Home 2024

Yearly Archives: 2024

மரண தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதியின் கருணை மனு நிராகரிப்பு

டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான்தீவிரவாதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர்22-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இருராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, கடந்த 2001-ம் ஆண்டில் பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆரீபை கைது செய்தனர். கடந்த 2005-ம் ஆண்டில் டெல்லி விசாரணை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லிஉயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது....

மீண்டும் நியமிக்கப்பட்ட அஜித் தோவல், பி.கே.மிஸ்ரா- யார் இவர்கள்?

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சியில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலும் பிரதமரின் முதன்மை செயலாளராக பி.கே.மிஸ்ராவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது நியமனத்துக்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. உளவு நடவடிக்கைகளில் மிகத் திறமையானவராக கருதப்படும் அஜித் தோவல், 1968-ம்ஆண்டின் ஐபிஎஸ் அதிகாரி. உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஓய்வுபெற்ற பின்பு இவர் கடந்த மே 2014-ல் மோடி முதன்முறையாக பதவியேற்றபோது இப்பணியில் அமர்த்தப்பட்டார். அப்போது முதல் பிரதமர் மோடியுடன் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறார். வெளியுறவுப் பாதுகாப்பு நிபுணரான தோவல்,தீவிரவாதத்தை...

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு வழங்கப்பட்ட அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு பெற்று இயங்கும்ஆம்னி பேருந்துகள், பயணிகள்பேருந்துகள் போல் செயல்படுகின்றன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, தமிழகத்தில் இயக்கப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியது. இதற்காக 3 முறை அவகாசம் வழங்கியபோதிலும், 652 பேருந்துகளில் 547 பேருந்துகள் ‘டிஎன்’எனப்படும் வாகனப் பதிவெண்ணை பெறவில்லை. எனவே, உரிய தமிழக பதிவெண் மற்றும் அனுமதிச்...

நீட் தேர்வு முறைகேட்டில் இருந்து தப்பிக்க முயல்வது மத்திய அரசின் திறமையின்மையை காட்டுகிறது: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

‘‘சமீபத்திய நீட் தேர்வு முறைகேட்டிலிருந்து தப்பிக்க மத்திய அரசு முயற்சி செய்வது அவர்களின் திறமையின்மையின் மற்றொரு ஒப்புதலாகும்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதன் மூலம் சமீபத்திய நீட் தேர்வு முறைகேட்டில் இருந்து தப்பிக்க மத்திய அரசு முயற்சி செய்வது அவர்களின் திறமையின்மையின் மற்றொரு ஒப்புதலாகும் மாநிலங்களின் உரிமையைப் பறித்த பிறகு, முறைகேடுகளின் மையமாக விளங்கும் பிரச்சினைகள் மற்றும் ஒழுங்கற்ற முறையில் தேர்வுகளை...

தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழக பொதுத்துறை செயலர் கே.நந்தகுமார் உட்பட 13 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவு: தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தாக்கர், பொதுத்துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த கே.நந்தகுமார், மனிதவள மேலாண்மைத்துறையின் செயலராகவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் எஸ்.நாகராஜன், நிதித்துறை செலவினப்பிரிவு செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விடுப்பில் இருந்து பணிக்கு திரும்பியுள்ள சிஜிதாமஸ் வைத்யன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராகவும், தமிழ்நாடு வீட்டுவசதித்துறை மேலாண் இயக்குநர் இ.சரவணவேல்ராஜ், புவியியல் மற்றும் சுரங்கத்துறை...

கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

கோயில் திருவிழாக்களில் ஆடல்,பாடல் வடிவில் ஆபாச நடனங் களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றைவிசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பல்வேறு கலை, கலாச்சாரம் கொண்ட மாநிலம். இந்த கலை, கலாச்சாரத்தில் இளைஞர்கள் ஆர்வம் கொள்ளாமல், சினிமா பாடல்களை அதிக அளவில்விரும்புகின்றனர். ஆடல், பாடல் நிகழ்வுகளில் ஆபாச நடனம், ஆபாசபாடல்கள் இடம் பெறுகிறது...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவும், மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி உயிரிழந்ததையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல்இன்று (ஜூன் 14) தொடங்குகிறது. வரும் 21-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 24-ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்ப பெற வரும் 26-ம் தேதி கடைசி நாளாகும். அன்றே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று,...

ஈராக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து- 10 பேர் படுகாயம்!

பாக்தாத்: ஈராக்கின் வடக்கில் எர்பில் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஈராக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தீ விபத்து தொடர்பான கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

முகிலன்குடியிருப்பில் புதிய குடிநீர் தொட்டி திறப்பு..

தென்தாமரைகுளம் அருகே முகிலன்குடியிருப்பு பிள்ளையார் கோயில் அருகில் வார்டு கவுன்சிலர் அமுதா பால்ராஜ் சொந்த நிதியியல் ரூ. 25 ஆயிரம் மதிப்பில் புதிய குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப் கலந்து கொண்டு புதிய குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். இதில், முகிலன்குடியிருப்பு மேற்கு ஊர் தலைவர் முகிலன்குடியிருப்பு கனகராஜன், திமுக நிர்வாகி தாமரை பிரதாப், அதிமுக நிர்வாகி பால்துரை உட்பட பலர் பங்கேற்றனர்.

குமரி- பாஜக முக்கிய கவுன்சிலர் மரணம்

குலசேகரம் பேரூராட்சி 2-வது கவுன்சிலர் பாஜக உறுப்பினர் தங்கப்பன் அவர்கள் நேற்று திடீரென மரணமடைந்தார். அவரது இறுதி சடங்கு இன்று மதியம் 12-மணிக்கு அரமன்னம் அவரது இல்லத்தில் வைத்து நடைபெறுகிறது. அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் பாஜக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவில்: ஜல்லிகள், எம். சாண்ட் விலை உயரும் அபாயம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகளால் தொடர் விபத்துகள் ஏற்படுவதைத் தொடர்ந்து, மாவட்டத்திற்குள் கனிம வள டாரஸ் லாரிகள் நுழைவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. இதனால் நேற்று முதல் மாவட்டத்திற்குள் கனிம வள டாரஸ்...

குளச்சல்: கடலில் ஒரு சிறுவன் மாயம்; 2 சிறுவர்கள் மீட்பு

குளச்சல் பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் ரியோபின் ரிட்ஜோ (14) ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்றபோது கடல் அலையில் சிக்கி மாயமானார். அவருடன் சென்ற மற்ற இரு நண்பர்கள்...

குமரி: 7 நாட்களாக பிணவறையில் தொழிலாளி சடலம்

கீரிப்பாறை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்து வந்த கேரளாவைச் சேர்ந்த சுரேஷ் (45) என்பவர், கடந்த 4ம் தேதி ரப்பர் தோட்டத்தில் சடலமாக கிடந்தார். பேச்சிப்பாறை...